பயணிகளுக்கு இனிமேல் நேரம் மிச்சம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
254

பயணிகளுக்கு இனிமேல் நேரம் மிச்சம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

பயணிகளுக்கு நேரத்தை குறைத்து பயன்பெறும் வகையில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இதன்படி தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பயண நேரத்தை குறைத்து, ரயில் தடத்தில் ரயில் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக தண்டவாளத்தை சீரமைத்தல், சிக்னல் முறையை மேம்படுத்துதல், வேக கட்டுப்பாடுகளை அகற்றுதல், பாலங்களை சீரமைத்தல், மேம்பாலம் மற்றும் சுரங்க கட்டுமான பணிகளை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னை சென்ட்ரல் – கூடூர் சென்னை சென்ட்ரல் – அத்திப்பட்டு அரக்கோணம் – ரேணிகுண்டா ஆகிய வழித்தடங்களில் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இன்ஜினை இயக்க  அடுத்தடுத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சென்னை – ரேணிகுண்டா, சென்னை – கூடூர் ஆகிய வழித்தடங்களில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகம் அதிகரிக்க இந்த நிதியாண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தஞ்சாவூர் – பொன்மலை, விழுப்புரம் – புதுச்சேரி, மதுரை- திருநெல்வேலி, விருதாச்சலம்- சேலம், விழுப்புரம்-காட்பாடி, அரக்கோணம்-செங்கல்பட்டு, திருநெல்வேலி-தென்காசி, திருநெல்வேலி-திருச்செந்தூர், தஞ்சாவூர்-நாகர்கோவில்  ஆகிய 9 வழித்தடங்களில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகம் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னை – ரேணிகுண்டா, அரக்கோணம் – ஜோலார்பேட்டை,  வழித்தடத்தில் ரெயில்வேகம் 110 கிலோமீட்டர் இருந்து 130 மீட்டர் ஆக அதிகரிக்கப்படுகிறது.  மேலும் சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை, பெங்களூர், மும்பை, ஆகிய வழித்தடங்களில் செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் வழங்கிய பிறகு இந்த வழித்தடங்களில் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்.

மேலும் பிப்ரவரி மாதத்தில் இருந்து சென்னை – பெங்களூர் செல்லும் வழித்தடத்தில் வேகம் மணிக்கு 160 கிலோமீட்டர் வரை வேகத்தில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Previous articleஇந்த திட்டத்தில் உள்ளவர்கள் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!
Next articleஇந்த முதுநிலை தேர்வுக்களுக்கான வழிமுறையில் மாற்றம்! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here