ஜூலை 31 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்!!
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.
சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் ரயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.இதில் வழங்கப்படும் குறைவான விலை டிக்கேட்களால் கோடி கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.இது ஏராளமான பொதுமக்களுக்கு மிகவும் சவுகரியமாக அமைகின்றது.
இந்த நிலையில் சில ரயில்கள் பராமரிப்பு பணிக்காக அடிக்கடி ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்று. மேலும் அடிக்கடி ரயில் ரத்து செய்யவடுவதால் பொதுமக்கள் பலர் இன்னல்களை சந்திக்கின்றனர். இந்த நிலையில் தெற்கு ரயில்வே நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் மதுரை மாவட்டத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை புறப்படும் வைகை விரைவு ரயில் மற்றும் சென்னை எழுபூரில் இருந்து காரைக்குடிக்கு செல்லும் பல்லவன் விரைவு ரயில் சேவை ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை ரயில்கள் ரத்து என்று அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து கோவை மற்றும் மயிலாடுதுறை ஜன் சதாப்தி விரைவு ரயில் சேவை ஜூலை 30 மற்றும் ஜூலை 31 ஆம் தேதி வரை ரத்து என்று தெரிவித்துள்ளது.
அதனையடுத்து திருச்சி மாவட்டத்தில் இருந்து தஞ்சாவூர் , மயிலாடுதுறை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு இயக்கப்படும் பல்வேறு இன்று முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 30 ஆம் தேதி இருந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை மாற்று பாதையில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து மும்பை விரைவு ரயில்கள் பாதை மாற்றம் செய்து ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை திண்டுக்கல், சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும். அடுத்ததாக ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கட்ராவிலிருந்து திருநெல்வேலி விரைவு ரயில் ஜூலை27, 28 ஆம் தேதி வரை குரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும். மேலும் சென்னை எழுப்பூர் குருவாயூர் விரைவு ரயில் ஜூலை 30 ஆம் தேதி பெரம்பூர், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல் வழியாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி விருத்தாசலம், சேலம், கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.