“விடாமுயற்சி” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த அஜித்!!

0
203

“விடாமுயற்சி” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த அஜித்!!

இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் அஜித் குமார்.தொடக்க காலத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் இப்பொழுது தமிழ் சிமாவின் பிரபல ஹீரோக்களின் பட்டியலில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

1992 களில் வெளியான பிரேம புத்தகம் என்னும் தெலுங்கு திரைப்படத்தில் சினிமாவிற்கு அறிமுகமானார்.அதன் பிறகு தமிழில் அமராவதி என்னும் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டார்.

என்னதான் நடிகர் அஜித் குமார் அவர்கள் சிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் அவருக்கு கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதில் அதிக ஆர்வம் காட்டினார்.

இந்த வகையில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம்  துணிவு. இந்த படம் கடந்த ஆண்டு வெளிவந்த நிலையில்  போதிய அளவு வசூல் பெறாத நிலையில் அஜித் அவர்கள் அடுத்து  நடிக்க இருக்கும் படத்தின் கதையை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் கொண்டு இருந்தார்.

அதன் பிறகு அவர் விடாமுயற்சி என்னும் படத்தில் நடித்து கொண்டு இருக்கின்றார். முதலில் விக்னேஷ் சிவன் அவர்கள் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு  பிறகு சில காரணங்களால் விலகி கொண்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.

முதலில் அஜித் பிறந்த நாளையொட்டி விடாமுயற்சி என்னும் டைட்டில் மட்டுமே விடப்பட்டது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு  அந்த படம் குறித்த எந்தவித அப்டேட்டும் வெளிவராதா என்று ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.

இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷ்ட்டிங் ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்க உள்ளது என்று கூறப்பட்ட நிலையில் அஜித்  அவர்கள் வேர்ல்ட் டூர் செல்கின்றார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் படத்தின் படபிடிப்பு பணிகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்க உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.