ரெயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தண்டவாளத்தில் செய்யப்படும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி பல்லவன், பாண்டியன், மற்றும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ஆகிய சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இது பற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,
ரெயில் தண்டவாளம் பராமரிப்பு, தொழில்நுட்பப் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூர் – காரைக்குடிக்கு பிப்ரவரி.16, 17, 20, 21, 23, 24, 27, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் (12605), மற்றும் காரைக்குடி – சென்னை எழும்பூருக்கு பிப்ரவரி.17, 18, 21, 22, 24, 25, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் (12606) ஆகியன ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் சென்னை எழும்பூர் – மதுரைக்கு பிப்ரவரி.17, 19, 24, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் அதிவிரைவு ரயில் (22623), சென்னை சென்ட்ரல் – மதுரைக்கு பிப்ரவரி.22, 24, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் அதிவிரைவு ரயில் (20601), தாம்பரம் – நாகர்கோவிலுக்கு பிப்ரவரி 27-ம்தேதி இயக்கப்படும் ரயில் (22657), மறுமார்க்கமாக, நாகர்கோவில் -தாம்பரத்துக்கு பிப்.28-ம் தேதி அன்று இயக்கப்படும் ரயில் (22658) ஆகியவையும் ரத்து செய்யப்படவுள்ளன.
சென்னை எழும்பூர் – செங்கோட்டைக்கு பிப்ரவரி.24, 25 தேதிகளில் இயக்கப்படும் சிலம்பு விரைவு ரயில் மற்றும் காரைக்குடி – செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளது. தேஜஸ் விரைவு ரயில் உட்பட சில ரயில்களும் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.