சீருடையில் மாற்றம்.. பள்ளிகள் திறப்பு!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!
பாண்டிச்சேரி மாநிலத்தில் தமிழ்,கேரளா,ஆந்திரா என நான்கு பாடத்திட்டங்கள் அமலில் உள்ளது. என் ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தொடக்கப்பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தை சிபிஎஸ்சி ஆக மாற்றம் செய்தது. இதனைத்தொடர்ந்து அதனடுத்து வரும் கல்வியாண்டில் அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் பாடத்திட்டமானது மாற்றம் செய்யப்பட்டது.
தற்பொழுது பாஜக கூட்டணியில் இருக்கும் என்.ஆர் காங்கிரஸ் வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமல் என்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
மேற்கொண்டு ஏப்ரல் இறுதி வரை பள்ளிகள் செயல்பட்டும் மாணவர்களுக்கு அதற்குண்டான பாட புத்தகங்கள் தரப்படவில்லை. அதேபோல சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதால் மாணவர்களுக்கு பள்ளி சீருடையில் மாற்றம் இருக்குமா என பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதுகுறித்து பதிலளிக்கும் வகையில் இயக்குனர் பிரியதர்ஷினி கூறுகையில், வரும் ஜூன் 6 ஆம் தேதி அறிவித்தப்படி பள்ளிகள் திறக்கப்படும் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும். சீருடையில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல மாணவர்களுக்கு புத்தகங்களும் பள்ளிகள் திறப்பு அன்றே வழங்க இருப்பதாக கூறியுள்ளார்.
மாணவர்களின் சீருடையை மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வாங்குவதற்காக ரூ.3.53 கோடியும் அதன் தையல் கூலியாக 2.92 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அங்கு படிக்கும் 77 ஆயிரம் மாணவர்களுக்கும் ரூ.3.18 கோடி மதிப்பில் சிபிஎஸ்சி பாட புத்தகங்களும் வாங்கப்பட்டுள்ளது.