அமைச்சரவையில் 5 துறைகள் மாற்றம்!! முதல்வர் தலைமையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!!
முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழக அரசில் 5 அமைச்சர்களின் பதவி மாற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக டெல்டா மாவட்டத்தை சேர்ந்த டி.ஆர்.பி ராஜா அவர்களும் பதவியேற்றுக் கொண்டார்.
முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழக அரசில் கடந்த சில வாரங்களாகவே அமைச்சர் இலாக்காக்களில் மாற்றங்கள் செய்யப்படும் என்று தகவல்கள் பரவி வந்தது. இதையடுத்து இன்று தமிழகத்தில் அமைச்சரவையில் 5 இலாக்காக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று அதாவது மே 10ம் தேதி நாசர் அவர்களின் மீது வைத்த சில குற்றங்களால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து இன்று தமிழக அமைச்சரவையில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கவனித்து வந்த நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை தங்கம் தென்னரசு அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் நாசர் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பால்வளத்துறை பதவி மனோ தங்கராஜ் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறை பதவி பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.தங்கம் தென்னரசு அவர்கள் கவனித்து வந்த தமிழ் வளர்ச்சித்துறை பதவி அமைச்சர் சாமிநாதன் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழில் துறை மன்னார்குடியை சேர்ந்த டி.ஆர்.பி ராஜா அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மாற்றம் செய்யப்பட்ட அமைச்சர்களின் பெயர்கள் மற்றும் துறைகளின் பட்டியல்:
* தங்கம் தென்னரசு – நிதித்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை
* டி.ஆர்.பி ராஜா – தொழில் துறை
* சாமிநாதன் – தமிழ் வளர்ச்சித் துறை
* பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் – தகவல் தொழில்நுட்பத் துறை
* மனோ தங்கராஜ் – பால்வளத் துறை