சமீபத்தில் கைலாசா நாட்டினுடைய அதிபதியாக கூறப்பட்டு வந்த சுவாமி நித்தியானந்தா அவர்கள் இறந்து விட்டதாகவும் அவருடைய சொத்துக்களை அடுத்து யார் அனுபவிப்பது என்பது குறித்த பல கேள்விகள் இணையத்தில் சென்று கொண்டிருந்தன. தான் இறக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்காக சுவாமி நித்தியானந்தா அவர்கள் நேரடியாக மக்களுடன் கலந்துரையாடி இருக்கிறார்.
இவ்வாறு பக்தர்களின் உடைய கேள்விகளுக்கு பதிலளித்த நித்தியானந்தா அவர்களிடம் சில முக்கிய கேள்விகளும் கேட்கப்பட்டது. அதில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டை எந்த கட்சி ஆளும் என்பது குறித்தும் கட்சி மாற்றம் நிகழும் என்பது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு பதிலளித்த சுவாமி நித்தியானந்தா அவர்கள் கைலாய குறித்து மட்டும் தன்னிடம் கேள்வி கேட்கும் படியும் அதனையும் இந்து மதத்தை குறித்து கேள்விகள் கேட்கும் பட்சத்தில் தன்னால் அதற்கு உறுதியான பதிலை தெரிவிக்க முடியும் என தெரிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக கைலாசாவில் ஆட்சி மாற்றம் கிடையாது என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்பு, அமேசான் காடுகளில் குறிப்பாக பொலிவியா பழங்குடியின மக்களின் நில அபகரிப்பு குறித்த கேள்வியும் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சுவாமி நித்தியானந்தா, 1 லட்சம் பேர் இருக்கக்கூடிய இடத்திற்கு யோகா கற்றுத் தருவதற்காக 3 பேர் சென்ற நிலையில் எப்படி அந்த மூன்று பேர் மட்டும் அவர்களுடைய நிலத்தை அபகரிக்க முடியும் என கேள்வி எழுப்பியதோடு, சில நாட்களுக்கு முன்பு எப்படி நான் இறந்து விட்டேன் என ஊடகங்கள் செய்தியை பரப்பினவோ அதேபோன்றுதான் நிலம் அபகரிப்பானது நடைபெறுவதற்கு முன்பாகவே அதாவது நடைபெறாத ஒரு சம்பவத்தை நடைபெற்றதாக ஊடகங்கள் மாற்றி கூறி விட்டன என விளக்கம் அளித்திருக்கிறார்.