அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றமா? தீவிர ஆலோசனையில் முதலமைச்சர்!

Photo of author

By Sakthi

தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் தேர்தலுக்கு முன்பு வரை திமுக ஆட்சிக்கு வந்தால் பெரிதாக எந்தவிதமான மாற்றமும் இருக்காது என்பது போன்ற தோற்றம் தமிழகம் முழுவதும் இருந்து வந்தது.

ஆனாலும் அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு திட்டங்களையும் நேரில் சென்று கவனித்து ஒவ்வொன்றையும், கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

அதோடு ஸ்டாலினின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் பலர் புதுமுகங்களாக இருந்து வருகிறார்கள். அதோடு பலர் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லையே என்று வருத்தத்தில் இருக்கிறார்கள். இருந்தாலும் அமைச்சரவை பட்டியல் வெளியிட்ட சமயத்திலேயே முதலமைச்சர் ஸ்டாலின் எல்லோருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க முடியவில்லை. அதன் காரணமாக அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பவர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.

இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் முடிவடைய இருக்கிறது ஆகவே அமைச்சரவையில் ஒரு சில மாற்றங்களை செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது அமைச்சர்களை ஒரு சிலர் மாற்றப்பட இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதற்கு வாய்ப்பில்லை என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறுகிய காலத்தில் அமைச்சர்களை மாற்றினால் அது தான் மிகப் பெரிய தவறான முடிவாகும் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்தால், நிர்வாக வசதிக்காக அமைச்சர்கள் ஒரு சிலர் வைத்திருக்கும் இதழ்களை மட்டும் மாற்ற முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த அன்றே அமைச்சர்கள் எல்லோருக்கும் 100 தினங்களில் செய்ய வேண்டிய திட்டங்கள் என்னென்ன என்பதை ஸ்டாலின் கூறி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த குறிக்கோளை எந்தெந்த அமைச்சர்கள் முடித்திருக்கிறார்கள், எந்தெந்த அமைச்சர்கள் பெரும்பாலும் முடித்து இருக்கிறார்கள், யார் யார் பாதி திட்டங்களை முடித்திருக்கிறார்கள். எந்தெந்த அமைச்சர்களின் குழுக்களைப் பற்றி கவலையே இல்லாமல் பணியாற்றி வருகிறார்கள். என்ற அறிக்கையை கடந்த மாதமே முதலமைச்சரிடம் உளவுத்துறை கொடுத்திருப்பதாக தெரிவிக்கிறார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் அமைச்சரவையில் ஒரு சில மாற்றங்கள் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் பரிசீலித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

சட்டப்பேரவை நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், அமைச்சரவை மாற்றம் தேவையில்லை என்று நினைத்ததால் அந்த யோசனையை முதலமைச்சர் ஸ்டாலின் தள்ளி வைத்துள்ளதாக தெரிவிக்கிறார்கள் .இந்த சூழ்நிலையில்தான் சட்டப்பேரவை தற்போது முடிந்து இருக்கின்ற சூழ்நிலையில் ,அமைச்சர்கள் ஒரு சிலரின் செயல்பாடு சென்ற காலங்களை விட மேம்பட்டு இருப்பது ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது. அதே நேரம் சில அமைச்சர்கள் தொடர்ச்சியாக திக்கு தெரியாமல் பணிபுரிந்து வருவதாகவும், முதலமைச்சர் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது, ஆகவே மிக முக்கியமான இலாகாக்களை வைத்திருக்கும் ஒரு சில அமைச்சர்களின் வேலைப்பளுவை குறைக்கும் விதத்தில் சிறப்பாக செயல்படும் இளம் தலைவர்களுக்கு அமைச்சர் பதவியை பிரித்துக் கொடுக்க ஸ்டாலின் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதன் அடிப்படையில், தற்போதைய அமைச்சர்கள் சேகர்பாபு, மெய்யநாதன், மனோ தங்கராஜ், உள்ளிட்டோருக்கு கூடுதலான இலாகாக்கள் அல்லது புதிய இலாகாக்கள் ஒதுக்கப்படும் என்று சொல்கிறார்கள். அதேபோல அமைச்சர்கள் ஐ பெரியசாமி, பெரியகருப்பன், உள்ளிட்டோர் கூடுதல் இலாகாக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் ஒரு சில வளமான இலாகாக்களை கொடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.

ஒரு சில மாவட்டங்களில் தற்சமயம் வரையில் அமைச்சரவை பிரதிநிதித்துவம் இல்லாமலேயே இருந்து வருகிறது. உதாரணமாக டெல்டா மாவட்டத்தில் ஒட்டுமொத்த தொகுதிகளில் திமுக கைப்பற்றி இருக்கிறது. ஆனால் தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திமுகவிற்கு ஒருவர் கூட இல்லை. இதேபோல வேறு சில முக்கியமான மற்றும் மிகப்பெரிய மாவட்டங்களிலும் அமைச்சர்கள் இல்லாத நிலை இருக்கிறது ஆகவே அங்கிருந்து புதிய அமைச்சர்கள் ஒரு சிலர் நியமிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இவை எல்லாம் கடந்த ஒருவார காலமாகவே முதலமைச்சர் தீவிரமாக ஆலோசனை செய்து வருவன என்று சொல்லப்படுகிறது மிக விரைவில் அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.