பெண்களின் ரயில் பெட்டிகள் மாற்றம்!! ரயில்வே துறையின் திடீர் அறிவிப்பு!!
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது.
இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை பயன்படுத்தி வருகின்றன்னர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் ரயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அதிக அளவில் பொதுமக்கள் ரயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் சென்னையில் இறுதி தாம்பரம் ,செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களுக்கு புறநகர் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த வகையில் நாள் ஒன்றிற்கு மட்டும் 60 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அதிக அளவில் பொதுமக்கள் ரயில்களில் பயணம் மேற்கொண்டாலும் அவை அனைத்தும் பாதுகாப்பாக இருக்கின்றது என்று கூறிவிட முடியவில்லை.
இன்று அனைத்து இடங்களிலும் ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில் பயணம் செய்கின்றனர்.அதனால் அவர்களில் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் ரயில் சேவைகள் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதன் காரணமாக மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செயும் விதமாக புறநகர் ரயில்களில் பாதுகாப்பை மேம்படுத்துவது பற்றிய ஆலோசனை நடைபெற்று வருகின்றது.மேலும் ரயில்களில் பாதுகாப்பு படையில் ஈடுபடும் காவல் துறையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ரயில்வே துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த வகையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பெண்களுக்கான பெட்டிகளை நடுப்பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெண்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் ரயில்வே காவல்துறைக்கு வசதியாக இருக்கும் என்று ரயிவே துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.