ரூட் மாற்றம்! போக்குவரத்து துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

Photo of author

By Parthipan K

ரூட் மாற்றம்! போக்குவரத்து துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

Parthipan K

Change root! Important announcement released by the transport department!..

ரூட் மாற்றம்! போக்குவரத்து துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

சென்னை  கிண்டி பகுதியில் உள்ள போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதால் இரு நாட்களுக்கு பாதை மாற்றியமைத்த போக்குவரத்து துறையினர். இது குறித்து போக்குவரத்து துறையினர் கூறியதாவது! கிண்டி ஜி.எஸ்.டி சாலையில் உள்ள ஹோட்டல் ஹப்லிஸ் அருகே உள்பக்கமாக நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பயணிகள் ஜூலை 9ஆம் தேதி மற்றும் ஜூலை 10ஆம் தேதி ஆகிய இரு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இப்போக்குறது மாற்றம் சனிக்கிழமை இரவு 11:00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை 5 மணி வரையிலும்,

ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியிலிருந்து அடுத்த நாள் விடியற்காலை ஐந்து மணி வரையிலும் நெடுஞ்சாலை பணி நடைபெறும்.இந்நிலையில் விமான நிலையத்திலிருந்து ஜி.எஸ்.டி சாலையில் வரும் வாகனங்கள் மற்றும் கண்டெய்னர் லாரிகள் கத்திப்பாரா பாலத்தின் மேல் நேராகச் சென்று சிப்பெட் சந்திப்பில் வலம்புரம் திரும்பி திரு.வி.கா தொழில்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் சென்று, அண்ணா சாலை சொல்ல வேண்டும்.

இவ்வாறாக பூந்தமல்லியில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் லாரிகள் மாற்றம் ஏதுமின்றி வழக்கமான சாலையிலேயே செல்லலாம என்று தெரிவித்தது.

மேலும் வட பழனியில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் லாரிகள் 100 அடி சாலை சிப்பெட் சந்திப்பில் இடது மற்றும் புறம் திரும்பி திரு.வி.கா தொழில்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் சென்று அண்ணா சாலைக்கு செல்லலாம் என்று போக்குவரத்து தொழிற்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த முக்கிய அறிவிப்பை கருத்தில் கொண்டு செயல்படுமாறு போக்குவரத்துதுரையினர் கூறியுள்ளனர்.