இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் குலதெய்வம் உங்களது வாழ்க்கையை வரமாக மாற்றும்..!!

Photo of author

By Divya

இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் குலதெய்வம் உங்களது வாழ்க்கையை வரமாக மாற்றும்..!!

இந்த உலகில் குலதெய்வத்தை விட பெரிய சக்தி ஏதும் இல்லை. நம் குலதெய்வத்திற்கு நம்முடைய வம்சாவளி தான் பிள்ளைகள். குல தெய்வ அருள் இருந்தால் எந்த ஒரு இன்னலும் நம்மை அண்டாது. நம் குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்து வந்தால் நவகிரகங்களும் நமக்கு துணை நிற்கும். வாழ்வில் குலதெய்வத்தையும், குலதெய்வ வழிபாட்டையும் ஒருபோதும் மறக்கக் கூடாது. நம் குலத்தை தழைக்க செய்யும் குலதெய்வம் நம் சாப வாழ்க்கையை வரமாக மாற்றிக் கொடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.

குலதெய்வம் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்..

“ரோகாச் சோகாச் ச தாரித்ர்யம் தெளர்பல்யம் சித்தவிக்ரியா
நச்யந்து குலதேவஸ்ய சக்தி மந்த்ரேண தாடிதா”

இந்த மந்திரத்திற்கு அர்த்தம்: பிணி, துக்கம், வறுமை, பலவீனம், மனநோய் இவை எல்லாம் என்னை அண்டாமல் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த மந்திர கட்டாக இருக்கும் குலதெய்வமாகிய உன்னை மனமுருகி வணங்குகின்றேன் என்பது ஆகும். அவரவர் குலதெய்வத்தை நினைத்து தினமும் இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் வாழ்க்கை உங்களுக்கு வரமாக அமையும்.