சார்பட்டா பரம்பரை திரைப்படம் மீது குற்றச்சாட்டு!! எம்.ஜி.ஆர் ஐ தவறாக சித்தரித்துள்ளது!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!!

Photo of author

By Preethi

சார்பட்டா பரம்பரை திரைப்படம் மீது குற்றச்சாட்டு!! எம்.ஜி.ஆர் ஐ தவறாக சித்தரித்துள்ளது!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!!

Preethi

Charge of the Charbatta Heritage Movie !! Misrepresented MGR !! Former Minister Jayakumar !!

சார்பட்டா பரம்பரை திரைப்படம் மீது குற்றச்சாட்டு!! எம்.ஜி.ஆர் ஐ தவறாக சித்தரித்துள்ளது!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!!

சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படம் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியானது. இந்த திரைப்படம் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி,ஜான் கொக்கென், கலையரசன்,  துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 70களில் வடசென்னை மக்களிடையே ஆன குத்துச்சண்டை போட்டி மீது இருந்த ஆர்வம் குறித்து இந்த திரைப்படம் விரிவாக சித்தரிக்கிறது. அதே நேரத்தில் அவசர காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் சூழலை இந்த திரைபடத்தின் இயக்குனர் பா.ரஞ்சித், வெளிப்படையாக காட்சிப்படுத்தியுள்ளார்.

இந்த விஷயம் ஒரு தரப்பினரிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும், மற்றொரு தரப்பு இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதை தொடர்ந்து, தற்போது ‘சார்பட்டா பரம்பரை’ படத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் இறந்த முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர்-க்கும் விளையாட்டுத் துறைக்கும் எதுவுமே தொடர்பில்லை என்பது போல இந்த படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தப் படம் முழுவதும் தி.மு.க.வின் பிரச்சாரப் படமாகவே எடுக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். குத்துச்சண்டையை மிகவும் நேசித்த ஒரே அரசியல் தலைவர் எம்.ஜி.ஆர். தான்.

மேலும், 1980 ஆம் ஆண்டு தமிழ்நாடு அமெச்சூர் பாக்சர் சங்கம் நடத்திய நிதி திரட்டும் வேடிக்கை குத்துச் சண்டையில் கலந்து கொள்வதற்காக நாக் அவுட் நாயகன் முகமது அலியை இறந்த முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர். சென்னைக்கு அழைத்து வந்தார் என்றும ஜெயக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார். இதை தொடர்ந்து, ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படமானது தி.மு.க. ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள், மதிக்கப்பட்டது போலவும் எம்.ஜி.ஆர். அவர்களைக் கைகழுவியது போலவும் காட்சிகள் இந்த திரைப்படத்தில் அமைக்கப்பட்டுள்ளன என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த தலைவர் எம்.ஜி.ஆரை ‘இந்த திரைப்படத்தில் தவறாகச் சித்திரித்துள்ளது மிகவும் வேதனையை அளிக்கிறது என்றார் மேலும் அவர் இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.