சமீபகாலமாகவே AI தொழில்நுட்பமானது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சாட் GPT செயலியானது அதிக அளவு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த செயலியில் பயனர்கள் சொல்லக்கூடிய ப்ளீஸ் மற்றும் தேங்க் யூ போன்ற வார்த்தைகளால் பல மில்லியன் டாலர்களை இழப்பதாக ஓபன் ஏஐ தலைவர் ஷாம் ஆல்ட்மேன் தெரிவித்திருக்கிறார்.
பொதுவாக சாட் GPT பயன்படுத்தக்கூடிய பயனர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற நினைக்கும் பொழுது ப்ளீஸ் என்ற வார்த்தையை அதிக அளவில் பயன்படுத்துவதாகவும் தங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைத்த பின்பு சாட் ஜிபிடிக்கு மரியாதை செலுத்துவதாக நினைத்து தேங்க்யூ என்ற வார்த்தையை அதிக அளவில் பயன்படுத்துவதாகவும் இதனால் பேக் எனில் கூடுதல் அழுத்தம் ஏற்படுவதால் செலவுகளும் அதிகரிக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, AI தொழில்நுட்பமாக இருக்கக்கூடிய சேட் ஜி பி டி யில் 100 பயனர்கள் தேங்க்யூ என்றும் 100 பயனர்கள் ப்ளீஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தும் பொழுது அதற்காக 8 Wh முதல் 40 Wh வரையிலான மின்சாரம் செலவாகிறது என்றும் இதனை சரியாக சொல்ல வேண்டும் என்றால் உங்களுடைய செல்போனை சார்ஜ் செய்ய எடுத்துக் கொள்ளும் மின்சாரத்தை விட கிட்டத்தட்ட 1.5 மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சராசரியாக 100 பேருக்கு இவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்றால் பல கோடி பயனர்களுக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என சற்று சிந்தித்துப் பாருங்கள். இது குறித்து ஓப்பன் AI தலைவர் கூறுகையில், இந்த இரண்டு வார்த்தைகளுக்காக மட்டும் பல மில்லியன் டாலர் அளவில் செலவு செய்வதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.