இன்றைய காலகட்டத்தில் செய்தி பரிமாற்றத்திற்கு மிக முக்கியமான செயலியாக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவது வாட்ஸ் அப் செயலி ஆகும். இதில் பல்வேறு அப்டேட்டுகள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது சாட் ஜிபிடி கொண்டு வரப்பட்டுள்ளது.
ஓபன் AI அதற்கான வழியை வாட்ஸ் அப்பில் ஏற்படுத்தி இருக்கிறது.மிகவும் பிரபலமான AI சாட்போட் இப்போது ஒரு எளிய WhatsApp மூலம் அணுகப்படுகிறது. இதன் மூலம் ஆக்கப்பூர்வமான பணிகள் மற்றும் உரையாடல்களில் ஈடுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ChatGPT பயன்படுத்துவதற்கான வழிமுறை :-
✓ முதலில் 1-800-242-8478 என்ற என்னை உங்களுடைய செல்போனில் புதிய தொடர்புகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
✓ அதன் பின் வாட்ஸ் அப்பிற்குள் சென்று சேட் ஜிபிடி ஐ ஓபன் செய்து கொள்வது எளிதான காரியம்.
✓ அதன்பின் தங்களுக்கு உள்ள சந்தேகம் அல்லது ஏதேனும் கேட்க வேண்டும் என்றால் சேட் ஜிபிடி மூலம் கேட்டு பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு சேவை கட்டணம் எதுவும் கிடையாது. மேலும் whatsapp மூலம் மட்டும் இன்றி இந்த நம்பரை தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு பெற்றுக் கொள்வதும் எளிதான காரியமே. இதற்கு எந்தவிதமான சேவை கட்டணமும் தற்பொழுது அறிவிக்கப்படவில்லை.
முழுக்க முழுக்க இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியின் whatsapp பயன்பாட்டிற்கு கால அவகாசம் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த உரையாடலை மேற்கொள்வதற்கு ஆன்லைன் தேவை இல்லை என்றும் ஆன்லைனில் கூட, அதாவது சிக்னல் இல்லாத இடங்களிலும் கூட சேட் ஜிபிடி யை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும், அதற்கான கால அவகாசம் 15 நிமிடங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.