சதுரகிரி கோவிலுக்கு பக்தர்களுக்கு கட்டுப்பாடு!! கோவில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மற்றும் சந்தன மகாலிங்கம் கோவிலானது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் வருகின்ற பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் சாமியை தரிசனம் செய்ய நான்கு நாட்களுக்கு பக்தர்கள் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும்.
அந்த வகையில் தற்போது ஆடி அமாவாசை திருவிழா வருவதனால் ஆறு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூறிய கோவில் நிர்வாகம் வருகின்ற பன்னிரெண்டாம் ஆம் தேதி முதல் பதினேழாம் தேதி வரை பக்தர்கள் அனைவரும் சாமியை தரிசிக்க வரலாம் என்று கூறப்பட்டுள்ளது.
காலை ஏழு மணி முதல் மதியம் பன்னிரெண்டு மணி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பக்தர்கள் இரவில் கோவிலில் தங்க கூடாது. அங்கு இருக்கும் நீரோடையில் குளிக்க கூடாது. கோவில் இருப்பது மலை பகுதியை என்பதால் எளிதாக தீ பற்றக்கூடிய பொருட்கள் எதுவும் எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை மழை அதிகமாக பெய்து நீரோடையில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும் பட்சத்தில் பக்தர்களுக்கு மலை ஏற தடை விதிக்கப்படும் என்று கூறி உள்ளது.
வழக்கமான நாட்களை விட ஆடி அமாவாசை திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் மிகுந்து காணப்படும் என்பதால் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் கூறி உள்ளது.