மற்றொரு வழக்கில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது!!

Photo of author

By Vinoth

பெண் போலீசாரை அவதூறாக பேசியது தொடர்பாக வழக்கில்  youtube சவுக்கு சங்கர் இரண்டு மாதங்களுக்கு முன்பு தேனியில் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது காரில் கஞ்சா இருந்ததாக கூறி தேனி போலீசார் தனியாக வழக்கு பதித்தனர். இந்த வழக்குகளில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

ஆனால் கஞ்சா வழக்கில் தொடர்ந்து கோர்ட்டில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்தது மதுரை நீதிமன்றம். அதன் அடிப்படையில் இரண்டு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் சவுக்கு சங்கர்  அடைக்கப்பட்டார். மேலும் இச்சூழலில் தூய்மை பணியாளர் தொடர்பாக தமிழக அரசின் அறிவிப்பு பற்றி அவதூறு பரப்பு வகையில் வீடியோ வெளியிட்டு பேசியதாக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கஞ்சா வழக்கில் அவர் சிறையில் உள்ள நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் மதுரை சிறைக்கு சென்று சவுக்கு சங்கர் கைது செய்ததற்கான நகலை வழங்கி உள்ளனர்.