இனி ரேஷன்  கடையில் மலிவு விலை காய்கறிகளா? ஓபிஎஸ் யின் அடுத்த குமுறல்!

Photo of author

By Rupa

இனி ரேஷன்  கடையில் மலிவு விலை காய்கறிகளா? ஓபிஎஸ் யின் அடுத்த குமுறல்!

பொதுமக்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக பெரும் ஆபத்துக்கள் தொடர்ந்த வண்ணமாக தான் உள்ளது. இந்த வகையில் முதலில் கரோனா என்ற தொற்று பாதிப்பு உருவானது. இது மக்களை விடாமல் துரத்தி வருகிறது. மக்களும் இதில் இருந்து மீண்டு வரும் பொழுதெல்லாம் கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பருவமழை காரணமாக சென்னை ஆந்திரா கேரளா உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் காய்கறிகள் என ஆரம்பித்து மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வரை ஏற்றுமதி இறக்குமதி செய்ய பெரும் சிரமமாக இருக்கிறது. அதனால் தற்சமயத்தில் 1 கிலோ தக்காளியின் விலை 150 ஐ எட்டியது.

மக்கள் அதனை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர் தமிழக அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்த பிறகு காய்கறிகளின் விலை சற்று குறைந்தது. அதுமட்டுமின்றி காய்கறிகளை மலிவு விலையிலே நியாய விலை  கடைகளில் வாங்கி கொள்ளலாம் என்ற அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டது.ஆனால் அது வெறும் பேச்சு வழக்காக மட்டுமே இருந்தது எதுவும் இன்று வரை செயல்முறைக்கு வரவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளிச் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ 100க்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறினர். ஆனால் வெளி சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ 125 ஆக இருந்தது. அதேபோல வெண்டைக்காய் ரூ 150 க்கும் கத்தரிக்காய் ரூ 70 க்கும் விற்று வந்தனர். செய்திகள் வெளியிடும் பொழுது ஓர் விலையிலும் வெளிச் சந்தையில் விற்கும் பொழுது ஒரு விலையிலும் நிலையற்றதாக காணப்படுகிறது.

தற்பொழுது மக்கள் இருக்கும் காலகட்டத்தில் காய்கறிகளை வாங்குவதற்கே பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல தற்பொழுது ஆளுங்கட்சியாக உள்ள திமுக சென்ற ஆண்டு எதிர்க்கட்சியாக இருந்தது அப்போது காய்கறிகளின் விலையை குறைக்கும் படி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் தற்பொழுது முதலமைச்சராக பதவி வகித்த பிறகு காய்கறிகளின் விலை உயர்ந்ததை கண்டு சிறிதும் கண்டு கொள்ளாமல் உள்ளார். இதனால் மக்கள் பெரும் அவதி படுகின்றனர்.அதுமட்டுமின்றி காய்கறிகளின் விலையை குறைக்கும் வடையும் அதனை நியாயவிலைக் கடைகளில் முறையான விலையில் விற்க கோரியும் தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் காய்கறி விலையை குறைக்கும் வடியும் அதுமட்டுமின்றி குறைந்தபட்சம் பாதியாவது விலை குறைந்து நியாயவிலை கடைகளில் விற்பனை செய்யும் படியும் முதலமைச்சரிடம் அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுள்ளார். இதற்கு திமுக எந்த வித நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும். இப்போது இருக்கும் காலகட்டத்தில் காய்கறிகளின் விலையை குறைத்தால் மட்டுமே பாமர மக்களின் உணவுக்கு வழி வகுக்கும்.