பெண்களை ஏமாற்றி பணம், நகை கொள்ளை!! குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!!

Photo of author

By CineDesk

பெண்களை ஏமாற்றி பணம், நகை கொள்ளை!! குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!!

CineDesk

Updated on:

பெண்களை ஏமாற்றி பணம், நகை கொள்ளை!! குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!!

தேனி மாவட்டம் குமுளி என்ற பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் முகநூல் எனப்படும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக பெண்களிடம் பழகி பணம் மற்றும் நகைகளை மோசடி செய்த வழக்கில் போலீசார் இவர்களை தில்லியில் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் பாலாவைச் சேர்ந்த நபர் மாத்யூ ஜோஸ் இவருக்கு வயது முப்பத்து நான்கு. இவர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனையில் ஜவுளிக்கடை வைத்து வருகிறார். இவரது கடையில் வேலை பார்க்கும் ஊழியர் குமுளியைச் சேர்ந்த ஷகீர் இவருக்கு வயது இருபத்து நான்கு.

இவர்கள் இருவரும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்கள் வழியாக திருமணமான பெண்களிடம் நட்பாக பழகி வந்தனர். இந்நிலையில் ஹரியாணாவைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் இவர்களுடன் பழகி வந்துள்ளார்.

இவரை குமுளிக்கு வரவழைத்து இளைஞர்கள் இருவரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் அப்பெண்ணை ஆபாச படமெடுத்து அவரிடமிருந்து 600 கிராம் தங்கம் மற்றும் ரூ.37 லட்சம் பணத்தையும் பெற்றுக்கொண்டு இதை வெளியில் கூறினால் கொன்று விடுவோம் என்றும், ஆபாச காட்சிகளை இணையத்தளத்தில் பதிவிட்டு விடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர்.

இதை அறிந்த அப்பெண்ணின் கணவர் குமுளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இடுக்கி மாவட்ட காவல் கண்காளிப்பாளர் குரியா கோஸ் உத்தரவின் கீழ், காவல் ஆய்வாளர் டி.டி.சுனில். தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வந்தனர்.

பணத்தை ஏமாற்றிய இரு இளைஞர்களும் தலைமறைவாக இருந்தனர். இவர்களின் செல்போன்களை கண்காணித்த காவல் துறையினர் குற்றவாளிகள் தில்லியில் இருப்பதைக் கண்டுபிடித்து உடனடியாக கைது செய்து வியாழக்கிழமை அன்று குமுளி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

மேலும் இவர்களை பீர்மேடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுபோன்று இவர்கள் ஏமாற்றிய வேறு பெண்களின் விவரங்களையும் தேடி வருகின்றனர்.