பித்த வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்து போக இதோ பாருங்கள் டிப்ஸ்!!

0
148
#image_title

பித்த வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்து போக இதோ பாருங்கள் டிப்ஸ்!!

பித்த வெடிப்பு என்பது அழகுப் பிரச்னையாக மட்டுமின்றி ஆரோக்கியம் சார்ந்த பிரச்னையாகும். பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவஸ்தை படும் பலர், அதற்கான காரணம் தெரியாமல் புலம்புகின்றனர். பாதங்களை சுத்தமாக பாதுகாப்பதில் கவனம் செலுத்தாததே காரணம்.

பித்த வெடிப்பு உள்ள இடத்தில் மருதாணி இலையை அரைத்து பத்து போட்டால் குணமாகும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செய்து ஒரு சிட்டிகை தேன் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வருகையில் பித்த வெடிப்பு சரியாகும்.

தேனும் சுண்ணாம்பும் குலைத்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வருகையில் பித்த வெடிப்பு சரியாகிவிடும்.

கால் பொறுக்கும் அளவிற்கு சுடு தண்ணீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்த பின் சுறுசுறுப்பாக இருக்கும் கல்லை எடுத்து நன்கு தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இவ்வாறு செய்கையில் பித்த வெடிப்பு சரியாவதுடன் பாதம் மென்மையாக மாறிவிடும்.

வேப்ப இலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை விளக்கெண்ணெய் சேர்த்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில் பூசினால் பித்த வெடிப்பு சரியாகிவிடும்.

தினமும் குளித்து முடித்தவுடன் பாதத்தை நன்றாக துடைத்துவிட்டு சிறிதளவு விளக்கெண்ணெய் எடுத்து பாதங்களில் தேய்த்து வரும் பொழுது பித்த வெடிப்பு வராமல் தடுக்க முடியும்.

 

author avatar
Selvarani