இதுவரை பூக்காத மல்லிகைப்பூ செடி பூக்க வைக்க ஆசையா!! கட்டாயம் இதை செய்யுங்கள்!!

0
106
#image_title

இதுவரை பூக்காத மல்லிகைப்பூ செடி பூக்க வைக்க ஆசையா!! கட்டாயம் இதை செய்யுங்கள்!!

நாம் வீட்டுத் தோட்டத்திலோ அல்லது மாடு தோட்டத்திலோ அதிக செடிகளை வைத்து வளர்க்க மிகவும் ஆசைப்படுவோம். பொதுவாக பூச்செடி ஒழுங்கான பராமரிப்பு முறை இருந்தால் மட்டுமே அந்த பூச்செடி அதிக பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். மல்லிகை பூச்செடியில் அதிக பூக்கள் பூக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. டீ தூள்
2. வெங்காய தூள்
3. வெந்தயம்

ஒரு பாத்திரத்தில் இரண்டு அல்லது மூன்று லிட்டர் தண்ணீரை கொதிக்க விடவும். கொதிக்கும் தண்ணீரில் பயன்படுத்திய டீ தூள் அல்லது புதிதாக வாங்கிய டீ தூள் மற்றும் வெங்காயத்தூள் இரண்டையும் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். இதனுடன் 100 கிராம் வெந்தயத்தை பொடி செய்து கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.
இக்கலவையை ஒரு நாள் முழுவதும் ஊற விட்டு பின்னர் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதனை நாம் இழை வழியாகவோ அல்லது வேறு வழியாகவோ வாரத்திற்கு இரண்டு முறை கொடுக்கலாம்.
நாம் பயன்படுத்திய டீ தூள் அதிகம் நைட்ரஜன் சக்தி இருப்பதால் மல்லிகைச் செடியில் புதிய துளிர் வருவதற்கு உதவுகிறது. வெங்காயத் தோலில் கார்பன் சல்பர் மெக்னீசியம் போன்ற நிறைய சத்துக்கள் நிறைய உள்ளன. வெந்தயத்தில் அதிக பொட்டாசியம் கன்டென்ட் இருப்பதால் மொட்டுக்கள் வைப்பதற்கு உதவுகிறது.
இவ்வாறு தொடர்ந்து வாரத்தில் இருமுறை கொடுத்துப் பாருங்கள் மல்லி செடியில் கொத்துக்கொத்தாக பூக்கள் வருவதை காண்பீர்கள்.