நமது உடலின் முக்கிய உள்ளுறுப்பு சிறுநீரகம்தான்.நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து கழிவுகளை பிரித்து திரவ வடிவில் சிறுநீராக வெளியேற்றுகிறது.இந்த சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் நம் உடல்நிலை மோசமாகிவிடும்.
தற்பொழுது பெரும்பாலானோர் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை பலரும் சந்தித்து வருகின்றனர்.சிறுநீரக கல்,சிறுநீர் பாதை தொற்று,வலி எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறுதல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
உடலில் நீர்ச்சத்து குறைவதால்தான் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது.இது தவிர மேலும் சில காரணங்களால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாழாகிறது.அது என்னவென்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள்:
1)உடலுக்கு தேவையான நீர் அருந்தவில்லை என்றால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.
2)தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.
3)அதிக உடல் பருமன் இருப்பவர்களுக்கு சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
4)மது மற்றும் புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு சிறுநீரகம் சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும்.
5)சிறுநீரை கழிக்காமல் அடக்கி வைத்திருப்பவர்களுக்கு சீக்கிரம் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்.
சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்ய வேண்டிய விஷயங்கள்:
**அதிகளவு தண்ணீர் பருகுதல்
**உரிய நேரத்தில் சிறுநீரை வெளியேற்றுதல்
**சிறுநீர் கழித்த பிறகு யோனிப் பகுதியை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தல்
**வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல்