செக் பண்ணுங்க! சிறுநீரக புற்றுநோய் இருந்தால்.. கழுத்தின் அடி பகுதியில் இந்த அறிகுறி தென்படும்!!

Photo of author

By Divya

செக் பண்ணுங்க! சிறுநீரக புற்றுநோய் இருந்தால்.. கழுத்தின் அடி பகுதியில் இந்த அறிகுறி தென்படும்!!

Divya

உங்களில் சிலருக்கு கழுத்துப் பகுதியில் தொடும் பொழுது கட்டிகளை உணரலாம்.இந்த கட்டிகள் மென்மையாக அல்லது கடினமாக இருக்கும்.நெகிழ்வுத் தன்மையுடனும் இருக்க வாய்ப்பிருக்கிறது.கழுத்துப் பகுதியில் கட்டி இருந்தால் சிலர் அதை அலட்சியமாக கருதி கவனிக்காமல் விடுகின்றனர்.சிலர் இதை ஏதோ பெரிய நோய் என்று எண்ணி அஞ்சி மேலும் உடல் நலத்தை பாதிக்கச் செய்கின்றனர்.

கழுத்துப் பகுதியில் கட்டி இருந்தால் ஏற்படும் பாதிப்புகள்:

1)பேசுவதில் சிரமம் ஏற்படும்
2)உடல் சோர்வு ஏற்படும்
3)உடல் எடை இழப்பு
4)கடும் தொண்டை வலி
5)உணவு உட்கொள்வதில் சிரமம்
6)அசௌகரிய உணர்வு

கழுத்துப் பகுதியில் கட்டி ஏற்பட காரணங்கள்:

1.அம்மை
2.சிறுநீரக பாதிப்பு
3.HIV
4.பல் தொற்று
5.காது சம்மந்தப்பட்ட பிரச்சனை
6.பாக்டீரியா தொற்று
7.சைனஸ் பிரச்சனை

இந்த பாதிப்புகளை தவிர கழுத்துப் பகுதியில் கட்டி ஏற்பட முக்கிய காரணமாக சிறுநீரக புற்றுநோய் இருக்கிறது.சிறுநீரகத்திற்கும் கழுத்திற்கும் இடையே தொடர்பு இருக்கிறது.சிறுநீரகப் புற்றுநோய் பாதிப்பு முற்றினால் கழுத்துப் பகுதியில் அரிதாக கட்டிகள் உருவாகும்.உங்களுக்கு இந்த கட்டி நீண்ட நாட்களாக இருக்கிறது என்றால் உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

சிலர் கழுத்துப் பகுதியில் கட்டிகள் இருந்தால் அதை ஆபத்தான நோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கும் என்று அஞ்சி உடல் ;நலத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.

கழுத்து பகுதியில் கட்டியுடன் வேறு சில அறிகுறிகள் தென்பட்டால் அதையும் கவனிக்க வேண்டும்.அதாவது அடிக்கடி காய்ச்சல் வருதல்,கழுத்து பகுதியில் கருப்பு புள்ளிகள் அதிகளவு தென்படுதல்,தோல் நிறத்தில் மாற்றம்,காரணமே இல்லாமல் உடல் எடை இழப்பு ஏற்படுதல் போன்றவை சிறுநீரக புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.இந்த அறிகுறிகள் தலை மற்றும் கழுத்து உள்ளிட்ட இடத்தில் புற்றுநோய் இருப்பதை உணர்த்துகிறது.கழுத்து கட்டிகள் வலியோடு அல்லது வலி இல்லமலோ எப்படியாக இருந்தாலும் நாம் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் ஒருமுறை மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்வது தான் நல்லது.