மேல் முறையீடு செய்தவருக்கு நீதிபதி வைய்த்த செக் பாயின்ட்! இதுவும் கற்பழிப்புதான்!

Photo of author

By Hasini

மேல் முறையீடு செய்தவருக்கு நீதிபதி வைய்த்த செக் பாயின்ட்! இதுவும் கற்பழிப்புதான்!

பெண்கள் எதாவது ஒரு முறையில் யாரோ ஒருவரால் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பெண்கள் எந்த நிலையில் இருந்தாலும், இந்த செய்தியில் கூட மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, நான் என்ன செய்தேன் என்றும், நான் செய்ததில் தவறு இல்லை என்றும் மேல் முறையீடு செய்து வாதிடும் நபரை நாம் என்ன செய்வது.

மும்பையைச் சேர்ந்த 33 வயது வாலிபர் ஒருவர் மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்ததாக செஷன்ஸ் கோர்ட் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வழங்கித் தீர்ப்பு கூறியிருந்தது. அந்த வாலிபர் இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி இவ்வாறு தீர்ப்பு கூறினார்.

அந்த மனுவின் மூலம் அந்த மனுதாரர் நான் பெண்ணுடன் உடலுறவு கொள்ளவே இல்லை. எனவே அதை கற்பழிப்பு என கூற முடியாது என கூறியிருந்தார். அதற்கு நீதிபதி ரேவதி மோகிதே  அடங்கிய அமர்வு முன் நடந்தது. அப்போது ஐகோர்ட் இப்படி கூறியது. தடயவியல் ஆய்வில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளி தான் அவரை இந்த வன்கொடுமை உள்ளாக்கினார் என்பதை உறுதிசெய்யும் ஆதாரங்களும் உள்ளன. உடல் உறவு வைக்காமல் செயல்களினால் தீண்டல்களினால் பெண்ணுக்கு  ஏற்படும் பாலியல் வன்கொடுமையும் கற்பழிப்பு சட்டத்தின் கீழ்தான் வரும் என்றும், கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்தும், ஐகோர்ட் தீர்ப்பு கூறியது.