சேலம் அரசு பள்ளியில் மதிய உணவில் ச்சீ? மாணவிகளுக்கு வாந்தி!.. மயக்கம்!..பெற்றோர்கள் அதிர்ச்சி?
சேலம் மாவட்டம் வேம்படிதாளம் அருகே உள்ள திருவளிப்பட்டி பகுதியில் அரசு துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் 140 மாணவ மற்றும் மாணவிகள் பயின்று வருகிறார்கள்.இந்நிலையில் கடந்து சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரின் தட்டில் மரஅட்டை ஒன்று இருந்துள்ளது.அதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி தன் தோழிகளிடம் காட்டியுள்ளார்.இதனையடுத்து சக மாணவர்கள் அங்குள்ள ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.அந்த ஆசிரியர்களோ அந்த மர அட்டையை எடுத்து தூக்கி போட்டு விட்டு மீண்டு சாப்பிடுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.
இந்த உணவை சாப்பிட்ட துர்க்காதேவி என்ற மாணவி திடீர் காலையில் வாந்தி எடுத்து வந்துள்ளார்.இது குறித்து மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் அனைத்து ஊர் மக்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.
இதை அறிந்த கொண்டலாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஜெகன்நாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.அவருடன் பல அதிகாரிகள் வந்திருந்தனர்.போராட்டத்தை கைவிடுமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.பின் அதிகாரிகள் சுகாதாரமான உணவுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .