தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது! போலீசார் விசாரணை!

0
237
A teenager who has been threatening to kill has been arrested! Police investigation!
A teenager who has been threatening to kill has been arrested! Police investigation!

தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது! போலீசார் விசாரணை!

கோவை மாவட்டம் செல்வபுரம் பனைமரத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(52) இவர் அதே பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகின்றார்.அதே பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார்(33) இவர் கூலி தொழில் செய்து வருகிறார். வினோத்குமார் ஆறுமுகத்தின் மகளிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகராறு செய்துள்ளார். இந்த தகராறு குறித்து ஆறுமுகம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வினோத்குமார் மீது கொலைமிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதனால் ஆறுமுகத்திற்கும் வினோத்குமார்க்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.இதனைதொடர்ந்து வினோத்குமார் ஆறுமுகம் என்பவரின் உறவினர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இது குறித்து காட்டூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் வினோத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த வினோத்குமார் ஆறுமுகம் மீது ஆத்திரத்தில் இருந்தார். இந்நிலையில் வினோத்குமார் ஆறுமுகத்தின் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இத புகாரின் பேரில் போலீசார் வினோத்குமாரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

Previous articleபேருந்தை சிறை பிடித்த மக்கள்! ஈரோட்டில் பரபரப்பு!
Next articleசேலம் அரசு பள்ளியில் மதிய உணவில் ச்சீ? மாணவிகளுக்கு வாந்தி!.. மயக்கம்!..பெற்றோர்கள் அதிர்ச்சி?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here