முடிக்கு பளபளப்பு தரும் இரசாயனம் இல்லா ஷாம்பு!! இனி வீட்டில் செய்து பயன்படுத்தலாம்!!

Photo of author

By Divya

தலைமுடியை ஆரோக்கியமான முறையில் பராம்பரித்து வந்தால் வயதான பிறகு முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்காமல் இருக்க முடியும்.ஆனால் தற்பொழுது இளம் வயதினரே தலைமுடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.

மூலிகை எண்ணெய்,மூலிகை ஷாம்பு பயன்படுத்தி வந்தால் நாளடைவில் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.கடைகளில் ஹெர்பல் என்ற பெயரில் விற்கப்படும் ஷாம்புகள் எந்த அளவிற்கு நம்பகமானவை என்பது தெரியாது.எனவே வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு நாமே இயற்கையான முறையில் ஷாம்பு தயாரித்து தலைக்கு பயன்படுத்தலாம்.கீழே சொல்லப்பட்டுள்ளவற்றில் தங்களால் சேகரிக்க முடிந்த பொருட்களை மட்டும் பயன்படுத்தி தலைக்கு முடிகளுக்கு ஊட்டமளிக்கும் ஷாம்பு தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)சீகைக்காய் – 1/2 Kg
2)வேப்பிலை – ஒரு கைப்பிடி
3)பூந்தி கொட்டை – 50 கிராம்
4)கடலை பருப்பு – 50 கிராம்
5)வெட்டி வேர் – ஒரு கைப்பிடி
6)வேப்பம் பூ – கால் கப்
7)செம்பருத்தி பூ – 20
8)அரப்பு – ஒரு கைப்பிடி
9)வெந்தயம் – 25 கிராம்
10)நெல்லிக்காய் – 20

செய்முறை விளக்கம்:-

*முதலில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் வெயிலில் போட்டு நன்றாக காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வற்றல் பதத்திற்கு காயவைத்துக் கொள்ள வேண்டும்.

*காய வைத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

*பிறகு இதை நைஸ் பவுடராக சலித்து ஒரு டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த செய்முறை அளவில் ஷாம்பு செய்தால் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.

*இந்த ஷாம்பு பொடி மூன்று தேக்கரண்டி அளவு ஒரு கிண்ணத்தில் கொட்டிக் கொள்ள வேண்டும்.

*அடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.பின்னர் தலைமுடியை ஈரமாக்கி கரைத்து வைத்துள்ள ஷாம்பை தலைக்கு அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

*அடுத்து வெது வெதுப்பான நீரில் தலைமுடியை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.இந்த ஷாம்புவை தொடர்ந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் தலைமுடி பளபளப்பாக மாறும்.

மேலும் முடி வளர்ச்சி விரைவில் அதிகரிக்கும்.முடி உதிர்வு ஏற்பட்ட இடங்களில் புதிய முடி வளரத் தொடங்கும்.