ரசாயனத்தால் உருவாக்கப்பட்ட பால்!! அதிர்ச்சி அடைந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்!!

0
305
Chemically made milk!! Shocked food safety officials!!
Chemically made milk!! Shocked food safety officials!!

சமீப காலமாகவே உணவு மற்றும் உணவுப் பொருட்களில் பல்வேறு விதமான கலப்படங்கள் மற்றும் புழுக்கள், பூச்சிகள் போன்றவை இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு செய்திகளும் பரப்பப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக, லேஸ் பாக்கெட்டில் கரப்பான் பூச்சி இருந்தது. ஒரு பொட்டலத்தில் வறுத்த தவளை ஒன்று கிடைத்தது. Hershey’s chocolate syrup பாட்டிலில் இறந்த எலி போன்ற செய்திகளை பார்த்தும் கேட்டவர்கள் இது போன்ற உணவு பொருட்களை வாங்குவதில் பயம் கலந்த தயக்கத்தை காட்டினர்.

அதிலும், மலாட்டைச் சேர்ந்த 26 வயது மருத்துவர் ஆன்லைன் மூலம் தான் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த செய்தியை நாம் அனைவரும் அறிவோம். இதனைத் தொடர்ந்து உத்திர பிரதேஷ் மாநில உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பால் மற்றும் சீஸ் தயாரிக்கும் ஃபேக்டரியல் சோதனை நடத்தியுள்ளனர். இது குறித்த முழு தகவலையும் இந்த பதிவில் காண்போம்.

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள அமீர்பூர் அகோர கிராமத்தில் பால் மற்றும் சீஸ் தயாரிக்கும் குடோனில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது, போலி பால் தயாரிப்பதற்காக ரசாயனம் மற்றும் கலப்பட பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு லிட்டர் ரசாயனம் கலந்து 500 லிட்டர் போலி பாலை தயாரித்துள்ளனர். இந்த கும்பல் கடந்த 20 ஆண்டுகளாக போலி பால் தயாரித்து விற்பனை செய்து வருவதையும் உணவுத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அஜய் அகர்வால் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

Previous articleபொதுத்துறை வங்கிகளின் 42000 கோடி கடன் தள்ளுபடி!! தொடரும் மீட்பு முயற்சி!!
Next articleதரமற்ற மருந்துகள்.. பராமரிப்பு இல்லாத மருத்துவ உபகரணங்கள்!! தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!