இந்தியாவில் பெண்களுக்கு சிறந்த நகரங்களாக சென்னையும் திருச்சியும் தேர்வு!!

0
109
Chennai and Trichy voted as the best cities for women in India
Chennai and Trichy voted as the best cities for women in India

அவதார் குழுமம் 2024-ம் ஆண்டிற்கான இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் சென்னை மற்றும் திருச்சி வெவ்வேறு பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.

இந்த ஆய்வின் முடிவுகள் பெண்களுக்கான பணியிட பாதுகாப்பு, பெண்களின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம், நகரங்கள் குறித்த பெண்களின் மதிப்பீடு ஆகியவற்றை கொண்டு வெளியிடப்படுகிறது.
கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நாடு முழுவதும் 60 நகரங்களில், மற்றும் அவதார் குழுமம் 1,672 பெண்களிடம் கணக்கெடுப்பு நடத்தினார்.அதன் படி வெளியிடப்பட்ட டாப் 10 நகரங்கள்பெங்களூரு,சென்னை,மும்பைஹைதராபாத்,புனே,கொல்கத்தா,ஆகமதபாத்,புதுடில்லி,குருகிராம்,கோவை, இதில் சென்னை இரண்டாவது இடத்தையும், கோயம்புத்தூர் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

அவதார் குழுமம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் – 2023 என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 10 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகையுள்ள நகரங்களில், சென்னை முதலிடத்தில் இடம்பிடித்துள்ளது (48.42 மதிப்பெண்கள்), பின்னர் கோவை (9-ஆவது இடம்) மற்றும் மதுரை (11-ஆவது இடம்) இடம்பெற்றுள்ளன.

10 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகையுள்ள நகரங்களில், திருச்சி முதலிடத்தில் உள்ளது (40.39 மதிப்பெண்கள்), பின்னர் வேலூர் (2-ஆவது இடம்), சேலம் (6-ஆவது இடம்), திருப்பூர் (8-ஆவது இடம்), மற்றும் புதுச்சேரி (10-ஆவது இடம்) ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஆய்வில் மொத்தமாக 113 நகரங்கள் ஆராயப்பட்டது.

பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களைத் தீர்மானிக்கும் ஆய்வில், சமூக உள்ளடக்கம், பாதுகாப்பு, பெண்களுக்கான பிரதிநிதித்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, பொது போக்குவரத்து, மருத்துவம், மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய காரணிகள் மதிப்பீடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டன.

சென்னைக்கு 53.1 மற்றும் திருச்சிக்கு 52.8 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. தொழில் துறையில் மகளிர் சேர்க்கையில் சென்னைக்கு 52.8 மதிப்பெண்கள், திருச்சிக்கு 13.4 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன.

அதேசமயம், சிசிடிவி கண்காணிப்பு, வெளிச்சமயமான சாலைகள், பாலின சமத்துவம், சமூக மாற்றம், மற்றும் அரசு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சூழல்களையும் கருத்தில் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி ஆணையர் இரா. வைத்திநாதன் கூறியதாவது குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் ஆதரவற்றோருக்கான இல்லங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. மாநகராட்சி, காவல் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுத் துறைகள் ஒருங்கிணைந்த பணியின் பலனாகவே திருச்சி பெண்களுக்கான சிறந்த நகரமாக முதலிடம் பெற்றுள்ளது.

Previous articleமுன்கூட்டியே அனுப்பப்பட்ட மகளிர் உரிமை தொகை!! அதிரடி வரவேற்பு!!
Next articleகுழந்தைகளுக்கான பான் கார்டு விண்ணப்ப வழிமுறை!!