பாஜகவினால் கதறும் திருமாவளவன்!

0
153

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.
இதனை தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை திராவிட முன்னேற்ற கழகம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அசாம் ,புதுவை போன்ற மாநிலங்களை தவிர்த்து தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவிற்கு மக்கள் ஒரு பெரிய அடியை கொடுத்திருக்கிறார்கள். அந்த மாநில மக்கள் மதவாத சக்தி சாதி வாதங்களை ஏற்கவில்லை அந்த மக்கள் அந்த மண்ணை கவர்வ படுத்தி இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது ஆண்டு கொண்டிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மம்தா பானர்ஜி முதல்வராக இருக்கிறார் எனவும், அங்கே மம்தா பேனர்ஜி விழுத்த வேண்டும் என்று முயற்சி செய்த பாஜக படுதோல்வி அடைந்து இருக்கிறது என்றும், கேரள மாநிலத்தில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றியடைய முடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார் திருமாவளவன்.

ஆனால் சென்ற சட்டசபை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் வெறும் மூன்றே மூன்று இடங்களை மட்டும் பிடித்த பாரதிய ஜனதா கட்சியினர் இந்த சட்டசபை தேர்தலில் சுமார் 70க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியடைந்து பலமான எதிர்க்கட்சியாக அமைய முடிகிறது என்றால் அந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.இதுவரையில் மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியை தவிர்த்து வேறு யாருமே நுழைய முடியாது என்ற கட்டமைப்பை உடைத்தெறிந்து இன்று ஒரு பலமிக்க எதிர்க்கட்சியாக அந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி உருவெடுத்திருப்பது அந்த கட்சிக்கு மாபெரும் வளர்ச்சி ஆகவே பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் திருமாவளவனின் கண்ணுக்குத் தெரியவில்லையா என்று ஒரு சிலர் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள். அதே போல சாதி மத பேதங்களை வைத்து மக்களை பிரிக்கிறார்கள் என்று திருமாவளவன் தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரிய விஷயமாக மாறியிருக்கிறது.ஜாதியையும், மதத்தையும் வைத்து மக்களை பிரித்து அந்த ஜாதி மத பேதங்களை வைத்து அரசியல் பார்க்கும் கூட்டம் யார் என்று தமிழகத்திற்கே தெரியும் என்ற கருத்து தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஒருவேளை மேற்கு வங்க மாநிலத்தில் சென்ற சட்டசபைத் தேர்தலில் 3 தொகுதிகளில் மற்றும் வெற்றியடைந்து இந்த சட்டசபை தேர்தலில் பலமான எதிர்க்கட்சியாக அமைய முடிகிறது என்றால் அதே செயலை தமிழகத்தில் பாஜக செய்ய இயலாதா என்ற கேள்வியும் எழுகிறது.

பாஜகவை திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சிகள் எதிர்ப்பதற்கான முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது என்னவென்றால், ஒருவேளை பாரதிய ஜனதா கட்சி இங்கே ஒரு பலமான சக்தியாக உருவெடுத்து விட்டால் இந்து மத எதிர்ப்பாளர்கள் மற்றும் மதமாற்றம் செய்பவர்களின் எண்ணம் இங்கே ஈடேற வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கும் என்ற காரணத்தினால் தான் தமிழகத்தில் பாஜக காலூன்ற கூடாது என்று ஒரு சில சக்திகள் நினைத்துக் கொண்டு இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

ஆனால் எல்லாம் தவிடுபொடியாக்கி கிட்டத்தட்ட 20 வருடத்திற்கு பின்னர் தமிழக சட்டசபைக்குள் பாஜகவின் சட்டசபை உறுப்பினர்கள் நுழைந்திருக்கிறார்கள் இதுவே தமிழகத்தில் பாஜகவிற்கு முதல் வெற்றிப் படிக்கட்டு தான் என்று சொல்லப்படுகிறது.

Previous articleஎம்.எல்.எவா எம்.பியா எது முக்கியம்!
Next articleகோபத்தில் இருக்கிறாரா எடப்பாடி பழனிச்சாமி?