எம்.எல்.எவா எம்.பியா எது முக்கியம்!

0
121

தமிழகம் புதுவை கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் போடப்பட்ட ஓட்டுக்கள் மே மாதம் எண்ணபடும் என தேர்தல் ஆணையம் முன்னரே அறிவித்து இருந்தது. அதன்படி நேற்றைய தினம் காலை 8 மணி அளவில் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்று காலைவரை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 158 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 76 தொகுதிகளிலும் வெற்றி அடைந்தது.

இதற்கிடையில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள். இவர்கள் இரண்டு பேருமே சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார்கள். அதிமுக மறுபடியும் ஆட்சியை பிடித்தால் இவர்கள் இருவரும் அமைச்சராக பதவி ஏற்பதற்கான வாய்ப்பு இருந்ததால் கேபி முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கின்ற வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதியிலும், வைத்திலிங்கம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கின்ற ஒரத்தநாடு சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆனால் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

ஆகவே தற்போதைய நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொள்வார்களா இல்லையென்றால் சட்டசபை உறுப்பினர் பதவியை என்ற கேள்வி எழுந்திருக்கிறது.சட்டசபை உறுப்பினர் பதவியை ஏற்றால் எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், எம்.பி பதவியை தக்கவைத்துக்கொண்டால் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆகவே எதைச்செய்தாலும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும்.