அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி!! ஒப்பந்தகாரர்கள் அதிர்ச்சி!!
சாலை அமைக்கும் பணிகளில் தாமதப்படுத்திய 8 ஒப்பந்தகாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் நடை பெற்று வரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவதாஸ் மீனா தலைமையில் மாநகராட்சி அலுவகத்தில் நடைபெற்றது.
இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் “சிங்கார சென்னை” திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பணிகளில் பழைய சாலைகளை தோண்டி, புதிய சாலைகள் அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டு, பல பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்காமல் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அந்த வகையில், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், ஆலந்தூர், பெருங்குடி மண்டலங்களில், பழைய சாலைகள் தோண்டி எடுத்து, 5 நாட்கள் ஆகியும் சரி செய்யாத 8 ஒப்பந்ததாரர்களுக்கு, 42 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் இவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் கமிஷனர் சங்கர்லால் குமாவத் உள்ளிட்ட அதிகார்கள் பங்கேற்றனர்.