தயாநிதி மாறன் தேர்தல் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Photo of author

By Vijay

தயாநிதி மாறன் தேர்தல் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Vijay

மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன், 2,33,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேர்தல் செல்லாது என வழக்குத் தொடரப்பட்ட விவரம்

அந்த தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல். ரவி, தயாநிதி மாறன் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

அவர் மனுவில் கூறிய குற்றச்சாட்டுகள்:

  • தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 17 அன்று முடிந்த நிலையில், ஏப்ரல் 19 (வாக்குப்பதிவு நாள்) அன்று பத்திரிகைகளில் விளம்பரம் மூலம் தயாநிதி மாறன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது எனக் கூறப்பட்டது.
  • தேர்தல் பிரச்சார செலவு, விளம்பர செலவு, பூத் ஏஜெண்ட்களுக்கு செலவிட்ட தொகை உள்ளிட்ட விவரங்களை முறையாக தெரிவிக்கவில்லை எனவும்,
  • தேர்தல் ஆணையம் அனுமதித்த 95 லட்சம் ரூபாயை விட அதிக தொகை செலவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
  • மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்பதால், தேர்தல் செல்லாது என உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தயாநிதி மாறன் தரப்பில் மனுதாக்கல்

தயாநிதி மாறன் தரப்பில், குற்றச்சாட்டுகளை நீக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரர் எம்.எல். ரவி அளித்த குற்றச்சாட்டுகளில் யாதும் தக்க ஆதாரங்கள் இல்லை எனக் குறிப்பிட்டார். மேலும், தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணமும் இல்லையெனத் தெரிவித்து, தயாநிதி மாறன் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.