ரவுடிகளை அடக்க விரைவில் வருகிறது புதிய சட்டம்! நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்த தகவல் நீதிபதிகள் பாராட்டு!

Photo of author

By Sakthi

ரவுடிகளை அடக்க விரைவில் வருகிறது புதிய சட்டம்! நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்த தகவல் நீதிபதிகள் பாராட்டு!

Sakthi

சென்னையில் இருக்கின்ற அயனாவரம் பகுதியில் நடந்த மோதல் குறித்த வழக்கில் வேலு என்பவரின் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டு அதன் பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. தன்மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வேலு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனமானது இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது, அந்த விசாரணையின் சமயத்தில் தாதாக்களை உடுக்கை திட்டமிட்ட குற்ற செயல்கள் தடுப்பு மசோதா சட்டசபையில் அடுத்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனை கேட்டுக்கொண்ட உயர்நீதிமன்றம் தமிழக அரசின் இந்த முடிவுக்கு பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறது, அதோடு திட்டமிட்ட குற்ற செயல் தடுப்பு மசோதா காவல்துறையினருக்கு உதவி புரியும் விதத்தில் இருக்கும் என்றும், நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

அதோடு தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பாராட்டுகளை தெரிவித்து இருக்கின்றன நீதிபதிகள் விரைவாக இதனை சட்டமாக்க வேண்டும் இதன் காரணமாக, குற்றச்செயல்கள் குறையலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்