தடுப்பூசிகள் செலுத்துதலில் மோசமான செயல்பாடுகள் உடைய மாவட்ட அமைச்சர்களை தட்டி தூக்க காத்திருக்கும் முதலமைச்சர்! அதிர்ச்சியில் அமைச்சர் பெருமக்கள்!

0
66

தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பு 1657 நேற்று வரையில் இருந்து வருகிறது சிறிது சிறிதாக நோய்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசு முடுக்கி விட்டிருக்கிறது இதற்கென்று ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி முகாம்களை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது மாநில அரசு எல்லோருக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்தல் என்ற ஒரு இலக்கை நோக்கியே மாநில அரசு செயல்பட்டு வருகிறது.

அந்த விதத்தில் சென்ற 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது அந்த முகாமில் 15 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது ஆனால் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் கடந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 24 லட்சம் நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது இந்த சூழ்நிலையில் செப்டம்பர் மாதம் இருபத்தி எட்டாம் தேதி என இன்றைய தினம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார், அந்த கடிதத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு ஊசி செலுத்தப்படும் வேகத்தை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார் தலைமைச் செயலாளர் இறையன்பு.அதாவது அருமையான செயல்பாடு, சிறப்பு மற்றும் மிக சிறப்பு கவனம் தேவை, மோசமான செயல்பாடு, என மாவட்டங்களைப் பிரித்து இருக்கின்றார் இறையன்பு.

இது தலைமைச் செயலாளரின் வெளிப்படையான தரவரிசைப் பட்டியல் ஆக இது இருந்தாலும் கூட இந்த பட்டியல் வெளியிடுவதற்கு முன்னர் முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற்று வெளியிடப்பட்டிருக்கிறது என சொல்கிறார்கள். அதன் அடிப்படையில் பார்த்தால் தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் இந்த தரவரிசை பட்டியல் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.இந்த நிலையில், தலைமைச் செயலாளர் வெளியிட்ட தரவரிசை பட்டியலில் கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களை மிக சிறப்பான செயல்பாடு என்ற நிலையில் வைத்திருக்கின்றார். தலைமைச் செயலாளர் இறையன்பு.

முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் அனைவருக்கும் ஏற்கனவே ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். அதாவது அவரவர் மாவட்டங்களில் தடுப்பூசிகள் செலுத்துவது தொடர்பாக கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு இதற்கு முன்னர் அறிவுறுத்தி இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த விதத்தில் ஒவ்வொரு அமைச்சரும் தன்னுடைய மாவட்டத்திற்கு உட்பட்ட இப்பகுதிகளில் தடுப்பூசி போடும் இயக்கத்தை தீவிர படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தலைமைச் செயலாளர் வெளியிட்டு இருக்கின்ற பட்டியல் மறைமுகமாக அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கு கொடுத்த தரவரிசை பட்டியலாகவும் இருக்கிறது என சொல்கிறார்கள். அந்த விதத்தில் மொத்தமாக இருக்கின்ற நாற்பத்தி ஐந்து மாவட்டங்களில் முப்பத்தி மூன்றாவது இடத்தில் இருந்து நாற்பத்தி ஐந்தாவது இடம் வரையில் வகிக்கும் மாவட்டங்களை புவர் பர்ஃபாமென்ஸ் என கூறியிருக்கின்றார் தலைமைச் செயலாளர் இறையன்பு.

அந்த புவர் பர்ஃபாமென்ஸ் மாவட்டங்கள் வருமாறு கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருப்பத்தூர், சிவகாசி, செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, வேலூர், அரியலூர், ராமநாதபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் புவர் பர்ஃபாமென்ஸ் மாவட்டங்களாக இருக்கின்றன.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஒப்புதலின்படி அளித்த தலைமைச் செயலாளரின் இந்த தர வரிசையின் படி பார்த்தால் சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அமைச்சர்களான துரைமுருகன், காந்தி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட அமைச்சர் பொன்முடி, கடலூர் மாவட்ட அமைச்சர்கள் எம் ஆர் கே பன்னீர்செல்வம், கணேசன், திருவண்ணாமலை, மாவட்ட அமைச்சர் ஏவ வேலு, புதுக்கோட்டை, அறந்தாங்கி மாவட்ட அமைச்சர் ரகுபதி, மெய்யநாதன், ராமநாதபுரம் மாவட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன், செங்கல்பட்டு மாவட்ட அமைச்சர் தாமோதரன், அரியலூர் மாவட்ட அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர், உள்ளிட்டோரின் மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்துவதில் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக முதலமைச்சரின் ஒப்புதலுடன் தலைமைச் செயலாளர் வகைப்படுத்தப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தப் பட்டியலின் அடிப்படையில் சிவகாசி, புதுக்கோட்டை, கடலூர், வேலூர், உள்ளிட்ட மாவட்டங்கள் இரட்டை அமைச்சர்கள் கொண்ட மாவட்டங்களாக விளங்குகிறது. இந்த மாவட்டங்களின் இந்த நிலைக்கு அந்த இரு அமைச்சர்களும் பொறுப்பாளர்கள் ஆகிறார்கள். அவர்களில் ஒரு அமைச்சர் நன்றாக செயல்பட்டு இருந்தாலும் தர வரிசைக்கு இருவருமே பொறுப்பேற்க வேண்டி இருக்கிறது. இதை 4 மாத காலத்தில் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அளித்த பிராக்ரஸ் ரிப்போர்ட் ஆகவே பார்க்க வேண்டி இருக்கிறது.