சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் வேலை வாய்ப்பு! பத்தாவது படித்திருந்தால் மாதம் 58800 சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க!

0
329
#image_title

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் வேலை வாய்ப்பு! பத்தாவது படித்திருந்தால் மாதம் 58800 சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னையில் உள்ள பிரபல கபாலீஸ்வரர் கோயிலில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு படித்த நபர்களுக்கு பல்வேறு வகையான வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றது. அதைப் பற்றி பார்க்கலாம்.

பணியின் பெயர் –

* நூலகர்
* அலுவலக உதவியாளர்
* ஓட்டுநர்
* உதவி மின் பணியாளர்

கல்வித் தகுதி –

* நூலகர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் குறைந்தது 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். அல்லது அதற்கு இணையாக அங்கீகரிக்கப்பட்ட தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் நூலக அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

* அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதோடு இளங்கலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

* ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அத்துடன் இலகுரக வாகனம் அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். அதே போல ஒரு வருட ஓட்டுநர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

* உதவி மின் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மின்கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மின் உரிமம் வழங்கல் வாரியத்திடம் இருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் –

* நூலகர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் ஆகிய பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 18500 ரூபாயும் அதிகபட்சமாக 58600 ரூபாயும் வழங்கப்படும்.

* அதே போல உதவி மின் பணியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 16600 ரூபாயும் அதிகபட்சமாக 52400 ரூபாயும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை –

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கபாலீஸ்வரர் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி –

கபாலீஸ்வரர் கோயில், மயிலாப்பூர், சென்னை – 04.

தேர்வு செய்யப்படும் முறை –

மேற்கண்ட பணிக்களுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி –

27-01-2024 மாலை 5.45 மணி வரை

பணி குறித்த கூடுதல் விவரத்திற்கு –

மேற்கண்ட பணிகளை பற்றிய கூடுதல் விவரம் தெரிந்து கொள்ள https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணைப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

இதர நிபந்தனைகள் –

கபாலீஸ்வரர் கோயில் காலியாக உள்ள மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இந்து மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு காண்பிக்கும் நபர்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணல் குறித்து தெரிவிக்கப்படும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது.

Previous articleதமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும்! திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு!
Next article40 முறை எழுதியும் திருப்தி இல்லாத எம்ஜிஆர்! திருப்தி படுத்திய ஒரே ஒரு கவிஞர்!