சென்னையின் அடையாளமான புகழ்பெற்ற பழைய கட்டிடம் இடிப்பு! தகவல் வெளியிட்ட அமைச்சர்! 

0
218
#image_title

சென்னையின் அடையாளமான புகழ்பெற்ற பழைய கட்டிடம் இடிப்பு! தகவல் வெளியிட்ட அமைச்சர்! 

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 100 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் எதிரே அமைந்துள்ளது குறளகம் கட்டிடம். பழமையான கட்டிடங்களில் ஒன்றான சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இந்த கட்டிடம் விளங்குகிறது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் கதர்கிராம தொழில்கள் துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன், 1970ல் கட்டி முடிக்கப்பட்ட குறளக கட்டிடம் நவீன வசதிகள் ஏதுமின்றி போதுமான வாகன நிறுத்துமிட வசத்யில்லாமல் மிகவும் பழையதாக உள்ளது.

தற்போது இவ்விரு கட்டடங்களும் பயன்பாட்டு முதிர்வின் காரணமாக மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

எனவே இக்கக்கட்ட்டிடங்களை இடித்து அதிகபட்ச பொருளாதார மதிப்பை அடையும் வகையில் தோராயமாக 100 கோடி செலவில் நவீன வசதிகளுடன் மக்களை கவரும் வகையில் புதிய கட்டிடம் கட்டப்படும் என அறிவித்தார்.

Previous articleகேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது இளம் பக்தனுக்கு நேர்ந்த சோகம்! 
Next articleசாலையோரம் நிறுத்தப்பட்ட காரிலிருந்து 177 கிலோ கஞ்சா பறிமுதல்!! இளைஞர் இருவர் கைது!!!