காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த மாவட்டங்களை எச்சரிக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் !!

Photo of author

By Parthipan K

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ,ஒடிசா ,மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிகபட்சமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வங்க கடலில் காற்றழுத்த காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று அடிக்க கூடும் என்பதால்   21-ஆம் தேதி மத்திய வங்கக் கடலில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு சேலம், தர்மபுரி உள்ளிட்ட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வட தமிழக மாவட்டங்களான  கிருஷ்ணகிரி, வேலூர் ,ராணிப்பேட்டை ,திருவண்ணாமலை ,ஈரோடு ,கோயம்புத்தூர் மற்றும் வட கடலோர பகுதிகளில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டலத்தை பொருத்தவரை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.