தவறை தட்டிக்கேட்ட நபருக்கு அரிவாள் வெட்டு! சினிமா பாணியில் நடந்த கொலை சம்பவம்

Photo of author

By Jayachandiran

தவறை தட்டிக்கேட்ட நபருக்கு அரிவாள் வெட்டு! சினிமா பாணியில் நடந்த கொலை சம்பவம்

Jayachandiran

Updated on:

சென்னை திருநின்றவூர் அருகேயுள்ள சம்பங்கி நகரைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் சொந்தமாக டிராவல்ஸ் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது வீட்டின் அருகே ஆட்டோவில் சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் வழிமறித்துள்ளனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மகேந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

 

இவர்களிடம் இருந்து தப்பிக்க ஒரு மளிகை கடைக்குள் மகேந்திரன் ஓடி ஒளிந்தபோதும், கொலைகார கும்பல் அவரை ஓட ஓட விரட்டி கடைக்குள் வைத்து அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதன்பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த மகேந்திரனை அக்கம்பக்கத்தினர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இச்சம்பவம் குறித்து போலீசார் சம்பங்கி நகரில் விசாரித்தபோது; குடியிருப்பு பகுதியில் மது குடிப்பது, புகைப்பது போன்ற சமூக விரோத செயல்களில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை மகேந்திரன் சில மாதங்களுக்கு முன்பு தட்டிகேட்டதால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து திட்டமிட்டே இந்த கொலை சம்பவத்தை நடத்தியுள்ளனர். இவ்வழக்கில் தொடர்பான தமிழ், சாலமன் உள்ளிட்ட மூவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.