தரக்குறைவான பேச்சுக்கு திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்; பத்திரிகையாளர் சங்கம் வார்னிங்! சோதனைமேல் சோதனை..!!

Photo of author

By Jayachandiran

தரக்குறைவான பேச்சுக்கு திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்; பத்திரிகையாளர் சங்கம் வார்னிங்! சோதனைமேல் சோதனை..!!

திமுக பிரமுகரின் தரக்குறைவான பேச்சுக்கு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், மன்னிப்பு கேட்க வேண்டுமென்று எச்சரித்துள்ளது.

சென்னையில் நடந்த வாசகர்கள் நிகழ்ச்சியில் பேசிய திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி பத்தரிகையாளர், ஊடகம் மற்றும் செய்தியாளர்களை கீழ்த்தரமாக பேசிய காணொளி சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையானது. திமுகவின் மூத்த அரசியல்வாதி இப்படி பொறுப்பில்லாமல் பேசலாமா என்னு திமுக மீதும் ஆர்.எஸ்.பாரதி மீதும் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்நிலையில், சமூகத்தின் நான்காவது தூணாக செயல்படும் தொலைக்காட்சி, ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்களை வாய்க்கு வந்தபடி பொறுமை இழந்து இகழ்ந்து பேசிய ஆர்.எஸ்.பாரதி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. எங்கள் மீது இருக்கும் நியாயமான விமர்சனங்களை ஏற்கிறோம். ஆனால், ஒருமையிலும் அநாகரிமாக எங்களை கொச்சைபடுத்தி பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

அரசியல் பொது வாழ்வில் இருப்பவர்கள் இதுபோன்று கீழ்த்தரமாக பேசுவதை கைவிட வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மீத்தேன் போன்ற மக்களுக்கு எதிரான திட்டங்களில் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்த திமுகவிற்கு அவர்களது கட்சியினராலே சோதனைக்கு மேல் சோதனை வந்துள்ளது.