டெல்லியை பின்னுக்கு தள்ளி அபாயகர நிலையை தொட்ட சென்னை!! இனி வரும் நாட்களில் பட்டாசு வெடிக்க தடை?
இந்தியாவில் அதிகப்படியான காற்று மாசடைந்த மாநிலமாக டெல்லி உள்ளது. தற்பொழுது இதனை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. தீபாவளியில் அரசு விதித்த நேரத்தையும் மீறி பலர் பட்டாசுகளை வெடித்தனர். அவ்வாறு பட்டாசு வெடித்ததில் சென்னையில் காற்றின் தரம் மிகவும் குறைந்து விட்டது. அந்த வகையில் தற்பொழுது சென்னையில் காற்றின் தரம் சராசரியாக 500AQI என்ற அளவுக்கு மேல் உள்ளது. ஓர் காற்று நல்ல தரத்தில் இருக்கிறது என்றால் சராசரியாக 0-50AQI என்ற அளவில் இருக்க வேண்டும்.
எப்பொழுதும் சென்னையில் ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் ஆனது 50 முதல் 60AQI என்ற அளவில் காணப்படும். ஆனால் தற்பொழுது 500 AQI என்ற அளவை தாண்டி விட்டது. கிட்டத்தட்ட 786 AQI என்ற அளவில் தற்பொழுது பதிவாகியுள்ளது. காற்றின் தரமானது 300AQI என்ற அளவை கடந்தாலே ஆபத்தான நிலை என்று கூறுவர். தீபாவளி அன்று இரவு முதல் சென்னையில் ஆலந்தூர், பெருங்குடி, சவுகார்பேட்டை, திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், வேளச்சேரி, கிண்டி, எண்ணூர், தீநகர், பாரிஸ் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளது.
நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளோர் மற்றும் மூச்சு திணறல் உள்ளவர்கள் இந்த காற்றினை சுவாசிப்பதால் உடல் நலக்கேடு ஏற்படும்.சென்னையில் நான்கு காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் உள்ளது. ஆனால் தீபாவளி என்று அந்த நிலையங்கள் எதுவும் செயல்படவில்லை. இரவு 11 மணி அளவில் தான் மணலியில் உள்ள கண்காணிப்பு நிலையம் செயல்பட்டது. பட்டாசு வெடித்து தற்பொழுது காற்று மாசுபாடு உண்டாகியுள்ளதால் இந்த காற்றில் ஆர்சனிக், லித்தியம், பாதரசம் போன்ற நச்சுக்கள் உள்ளது. இந்த நச்சுக்கள் அனைத்தும் உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தும்.
இதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டோர், ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.இந்த காற்று மாசால் வயது முதிர்ந்தவர்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். காற்றின் தரம் தொடர்ந்து குறைந்து காணப்பட்டால் இனி வரும் நாட்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கக்கூடும்.