சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த இளைஞர் வேலை இல்லாமல் வேலை தேடி வந்ததாக தெரிகிறது. அவருக்கு தந்தை இல்லாத நிலையில் தாயார் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறார். இவரது தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் எப்படியாவது பணத்தை அம்மா மருத்துவ செலவுக்கு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட தொடங்கினர்.
ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை அதிகமாக இழந்ததாக தெரிகிறது. மேலும் தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக வீட்டில் இருந்த பணத்தை எடுத்து ஆன்லைன் ரம்மி விளையாடியதாகவும் தெரியவந்ததுள்ளது. ஆன்லைன் ரம்மி பணத்தை இழந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மேலும் இளைஞரின் உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.