இன்று நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா! சிறப்பு விருந்தினராக பங்கேற்க்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி!

Photo of author

By Sakthi

44 ஆவது உலக செஸ் சாம்பியன் போட்டியான செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை மாதம் 28ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பலர் போட்டிகளை வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழகத்தைச் சார்ந்த பிரக்யானந்தா வெகு சிறப்பாக விளையாடினார்.

அதோடு தமிழகத்தை சேர்ந்த பலர் பல நாட்டு செஸ் சாம்பியன்களுடன் தொடரை சமம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

இந்த நிலையில், வெகு சிறப்பாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளையுடன் நிறைவுபெறுகிறது. ஆகவே இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது, அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பரிசுகளை வழங்குகிறார்.

மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.