செஸ் ஒலிம்பியாட்ப்போட்டி! பாராட்டிய பிரதமர் நன்றி தெரிவித்த முதல்வர்!

கடந்த 2014 ஆம் வருடம் பாஜக நரேந்திர மோடி தலைமையின் கீழ் ஆட்சிக்கு வந்த பிறகு திமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கிடையே கடுமையான முதல் நிலவி வந்தது.

இந்த நிலையில், பாஜகவை ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கடுமையாக விமர்சனம் செய்தார். அதேபோல பாஜகவும் திமுகவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை மிக சிறப்பாக நடத்தியதற்காக பாராட்டு தெரிவித்த பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் நடைபெற்ற 44 வது செஸ் ஒதும்பியார்ட் போட்டிகளை தமிழக மக்களும், தமிழக அரசும், மிகச் சிறப்பாக நடத்தி நடத்தியிருக்கின்றன உலகம் முழுவதிலுமிருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று நம்முடைய மகத்தான கலாச்சாரத்தையும், விருந்தோம்பல் பண்பையும், பறைசாற்றியமைக்கு என்னுடைய பாராட்டுக்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் பிரதமரின் கனிவுமிக்க பாராட்டுகளுக்கு நன்றி.

விருந்தோம்பலும், தன்மானமும் ,தமிழர்களின் இணை பிரியா இருபெரும் பண்புகள் தொடர்ச்சியான உங்களுடைய ஆதரவையும், இதுபோல இன்னும் பல உலகளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment