“வீரர்களை நாட்டுக்காக விளையாடுங்கள் என கெஞ்ச முடியாது…” பயிற்சியாளர் உச்சகட்ட அதிருப்தி

0
84

“வீரர்களை நாட்டுக்காக விளையாடுங்கள் என கெஞ்ச முடியாது…” பயிற்சியாளர் உச்சகட்ட அதிருப்தி

வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து தாங்கள் விளையாடும் தொடர்களில் தோல்வியை தழுவி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் பல திறமையான பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் இருந்தும் அந்த அணி பல தொடர்களை சுலபமாக இழந்து வருகிறது. இத்தனைக்கும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் உலகளவில் நடக்கும் டி 20 லீக் போட்டிகளில் அதிகளவில் கலந்துகொண்டு கலக்கி வருகின்றனர். ஆனால் தேசிய அணிக்காக விளையாடும் போது மட்டும் சொதப்பி வருகின்றனர்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் இதுகுறித்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். அதில் “பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் மற்ற இடங்களில் ஃப்ரான்சைஸ் லீக்கில் விளையாடுகிறார்கள் அல்லது காயம் அடைந்துள்ளனர். இது காயப்படுத்துகிறது. வேறு வழியில்லை. ஆனால் என்ன செய்ய முடியும்? நான் வீரர்கள் தங்கள் நாடுகளுக்காக விளையாட வேண்டும் என்று அவர்களிடம் போய் கெஞ்ச விரும்பவில்லை. நீங்கள் மேற்கிந்தியத் தீவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால், நீங்கள் அணிக்கான போட்டிகளில் விளையாட தயாராக இருக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் ” வாழ்க்கை மாறிவிட்டது, வீரர்கள் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன, மேலும் அவர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடுவதை விட மற்ற லீக் போட்டிகளில் விளையாடுவதை தேர்வுசெய்தால், அது எப்படி இருக்கும்” எனவும் கூறியுள்ளார்.