பிரெட் மட்டும் இருந்தால் போதும் சூப்பரான மாலைநேர ஸ்நாக் செய்யலாம்..!

0
219

மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சுவையாக எதாவது செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர். ஈசியாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் உள்ள சீஸ் ஆம்லெட் சாண்ட்விசை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம்.

தேவையானவை :

பிரெட் – 2 முட்டை – 1 வெங்காயம் – 1 சிறியது பச்சை மிளகாய் – 1 மஞ்சள் தூள் – 1 சிட்டிகை கொத்தமல்லி – சிறிதளவு மிளகு தூள் – விருப்பத்திற்கேற்ப உப்பு – தேவையான அளவு சீஸ் – விருப்பத்திற்கேற்ப வெண்ணெய் – விருப்பத்திற்கேற்ப

செய்முறை :

கொத்தமல்லி, வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். சீஸை தனியே துருவி எடுத்து வைத்து கொள்ளுங்கள். முட்டையை ஒரு கிண்ணத்தில் அடித்து கொள்ளுங்கள்.

முட்டையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து கலக்கி கொள்ளுங்கள்.அதனுடன் துருவிய சீஸை சேர்த்து கொள்ளுங்கள். அடுப்பில் தோசைக்கல்லை அது சூடானதும் அதில் முட்டைகலவையை ஊற்றி ஆம்லெட்டாக ஊற்றவும்.

பிரெட்டை வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து கொள்ளுங்கள்.அதனை ஆம்லெட் நடுவில் வைத்து அதனை இரண்டாக பிரித்து ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கவும். பிரெட்டை பிரட்டி வெண்ணெய் தடவி வாட்டி எடுத்தால் சுவையான சீஸ் ஆம்லெட் சாண்ட்விச் தயார்.

Previous articleவாணி ஜெயராம் மர்மம் மரணமா? பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! 
Next articleபேத்தியை கழுத்தை நெறித்து கொன்ற பாட்டி… சேலம் அருகே நடந்த கொடூர சம்பவம்..!