இன்று பலரும் பாதிக்க கூடிய விஷயமாக இருமல் உள்ளது.பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் இருமலால் தொண்டை வலி,தொண்டை கரகரப்பு,தூக்கமின்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.
பெரும்பாலானோருக்கு இரவு நேரத்தில் வறட்டு இருமல் ஏற்படுகிறது.இதனால் கடுமையான தொந்தரவுகளை சந்திக்க நேரிடுகிறது.இருமல் வந்தால் வாய்க்குள் அடக்கி வைப்பதை தவிர்க்கவும்.இவ்வாறு செய்வதால் இடைவிடாத இருமல் ஏற்படும்.இருமல் பாதிப்பு இருப்பவர்கள் போதிய தண்ணீர் அருந்த வேண்டும்.
இருமலை போக்கும் சில வீட்டு வைத்திய வழிமுறைகள் இங்கே.
1)ஒரு துண்டு இஞ்சியை இடித்து ஒரு கப் தண்ணீர் போட்டு கொதிக்க வைத்து தேன் சேர்த்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.
2)சூடான நீரில் சிறிது தேன் கலந்து குடித்தால் தொண்டை கரகரப்பு,வறட்டு இருமல் பாதிப்பு சரியாகும்.
3)பூண்டு பல்லை இடித்து ஒரு கிளாஸ் நீரில் கலந்து கொதிக்க வைத்து வடித்து குடித்தால் இருமல் நிற்கும்.
4)தேவையான அளவு துளசி இலைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ள வேண்டும்.பிறகு அதில் தேவையான அளவு தேன் கலந்து குடித்தால் வறட்டு இருமல் நிற்கும்.
5)தண்ணீரை சூடாக்கி குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு,இருமல்,சளி உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும்.
6)வெந்தயம்,பெருஞ்சீரகம்,கிராம்பு பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தேநீரை குடித்து வந்தால் இருமல் பிரச்சனை சரியாகும்.
7)தூதுவளை இலையை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் இருமல் பிரச்சனை சரியாகும்.