இளம் வயது பெண்கள் அனுபவிக்கும் நெஞ்சு வலி!! காரணமும் உரிய தீர்வும் இதோ!!

Photo of author

By Divya

இளம் வயது பெண்கள் அனுபவிக்கும் நெஞ்சு வலி!! காரணமும் உரிய தீர்வும் இதோ!!

Divya

தற்பொழுது இளம் வயதில் உள்ள பெண்கள் நெஞ்சு வலி பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.இதற்கான காரணம்,அறிகுறி மற்றும் தீர்வு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கு நெஞ்சு வலி வர காரணங்கள்:

**மன அழுத்தம்
**தூக்கமின்மை
**அலர்ஜி
**அதிகப்படியான கவலை
**வாயுத் தொல்லை
**தசைப்பிடிப்பு
**நுரையீரல் பிரச்சனை

இளம் வயது நெஞ்சு வலி அறிகுறிகள்:

**பதட்டம்
**அதிகமாக வியர்த்தல்
**மூச்சுத்திணறல்
**அதிக தலைவலி
**குமட்டல்
**அதிக உடல் சோர்வு
**தலைச்சுற்றல்
**தோள்பட்டை வலி
**கழுத்து வலி
**மார்பு பகுதியில் இறுக்க உணர்வு

இளம் வயது நெஞ்சு வலியை குணப்படுத்தும் சித்த வைத்தியங்கள்:

தேவையான பொருட்கள்:-

1)குங்குமப் பூ – சிறிதளவு
2)பால் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

குங்குமப் பூவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த பூவை மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.

குங்குமப் பூ தேவையான அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பால் நன்றாக கொதித்து வந்ததும் இடித்து தூளாக்கி வைத்துள்ள குங்குமப் பூவை அதில் கொட்டி நன்றாக மிக்ஸ் செய்து பருக வேண்டும்.இந்த குங்குமப் பூ பாலை பருகி வந்தால் மன அழுத்தம் கட்டுப்படும்.இதனால் மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் நெஞ்சு வலி பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)பாதாம் பருப்பு பொடி – ஒரு தேக்கரண்டி
2)பசும் பால் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

பாதாம் பருப்பை பொடித்து வைத்துக் கொள்வும்.பிறகு பாத்திரம் ஒன்றில் பால் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பாலில் பாதாம் பருப்பு பொடி போட்டு பருகினால் இளம் வயது நெஞ்சு வலி பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)ஆப்பிள் சீடர் வினிகர் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து பருகினால் மன அழுத்தத்தால் ஏற்படும் நெஞ்சு வலி பாதிப்பு குணமாகும்.