ஊரே மணக்கும் செட்டிநாடு மட்டன் கறி குழம்பு : சுவையாக செய்வது எப்படி?

Photo of author

By Gayathri

ஊரே மணக்கும் செட்டிநாடு மட்டன் கறி குழம்பு : சுவையாக செய்வது எப்படி?

செட்டிநாடு என்று பெயரை எங்கையாவது பார்த்தால் உடனே நம் நினைவிற்கு வருவது செட்டிநாடு மட்டன் குழம்புதான். அந்த அளவிற்கு பெயர் போனது செட்டிநாடு மட்டன் குழம்பு.

செட்டிநாடு குழம்பை எல்லோரும் கடைகளில் சாப்பிட்டிருப்பாங்க. ஆனால், அதை நம் வீட்டிலேயே செய்து பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

மட்டன் – 2 கிலோ

இஞ்சி – 3 துண்டு

பூண்டு – 10 பல்

சின்ன வெங்காயம் -200 கிராம்

பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது -4

தக்காளி நறுக்கியது – 4

பட்டை – 4

கிராம்பு – ½

மிளகு – 4 ஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

சோம்பு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 4 ஸ்பூன்

மல்லித்தூள் – 4 ஸ்பூன்

செய்முறை:

முதலில் முட்டனை நன்றாக கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதன் பின்னர் ஒரு மிக்ஸியிலோ அல்லது மம்மியிலோ சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, மல்லி, மிளகாய் மிளகு அனைத்தையும் நன்றாக கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு, அரைத்து வைத்த மசாலாவை மட்டன் துண்டுகளில் தடவி 30 நிமிடம் நன்றாக ஊற வைக்க வேண்டும்.

பின்னர், ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் மசாலா தடவி வைத்த மட்டனைப் போட்டு 4 அல்லது 6 விசில் வரும் வரை வேக விடவும்.

இதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்னர், தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதனையடுதது, வேக வைத்த மட்டனை அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

எண்ணெய் மேலே சுருண்டி வந்ததும், கொஞ்சம் கொத்தமல்லியை அதில் தூவி இறக்கினால சுவையான செட்டிநாடு மட்டன் கறி தயார்.