உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்க சீரகம்,ஓமத்தை இரவு நேரத்தில் சாப்பிடுங்கள்.இவை இரண்டும் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட பொருளாகும்.இவற்றை எப்படி மருந்தாக பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)ஓமம் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி ஓமத்தை கடாயில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து இரவில் தூங்கச் செல்வதற்கு முன் வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.
அதன் பிறகு ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் குடிக்க வேண்டும்.இந்த சீரகம் மற்றும் ஓம விதையை சாப்பிடுவதால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த இரண்டு மசாலா பொருட்களும் நமது உடலுக்கு பலவித நன்மைகளை வாரி வழங்குகிறது.
சீரகம் மற்றும் ஓமத்தை ஒன்றாக சாப்பிட்டால் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகள் வேகமாக கரைந்துவிடும்.இந்த இரண்டு பொருட்களும் எடை இழப்பிற்கு உதவியாக இருக்கிறது.
இவைகளில் இருக்கின்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.சளி,இருமல் போன்ற நோய் பாதிப்புகள் வராமல் இருக்க இந்த பொருட்களை மருந்தாக உபயோகப்படுத்தலாம்.
ஓமம் மற்றும் சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க இவை இரண்டையும் மருந்தாக உட்கொண்டு வரலாம்.செரிமானப் பிரச்சனை சரியாக ஓமம் மற்றும் சீரகத்தை கொண்டு டீ செய்து குடிக்கலாம்.
இரவு நேரத்தில் இந்த இரண்டு பொருட்களை சாப்பிடுவதால் நல்ல தூக்கத்தை பெற முடியும்.உடல் வலி மற்றும் அலர்ஜி பிரச்சனைகள் அனைத்தும் குணமாக இந்த சீரக ஓமம் பானத்தை குடிக்கலாம்.மலச்சிக்கல்,வாயுத் தொல்லை போன்றவை அகல இந்த பானத்தை செய்து குடிக்கலாம்.