உங்கள் குடலில் தேங்கிய கெட்ட வாயுக்கள் நீங்க பெருஞ்சீரகம்,இஞ்சி போன்ற பொருட்களை மருந்தாக பயன்படுத்தலாம்.
தீர்வு 01:
உணவு உட்கொண்ட பிறகு ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.
பெருஞ்சீரகம் அஜீரணப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.பெருஞ்சீரகத்தில் டீ செய்து குடித்தாலும் பலன் கிடைக்கும்.
தீர்வு 02:
உணவு உட்கொண்ட பிறகு இஞ்சி டீ செய்து குட்டித்தல் அஜீரணக் கோளாறு நீங்கும்.வாயுத் தொல்லை அகல இஞ்சி டீ செய்து குடிக்கலாம்.
தீர்வு 03:
ஒரு கப் தண்ணீரில் நான்கு புதினா இலைகளை போட்டு கொதிக்க வைத்து வடித்து குடித்தால் வாயுத் தொல்லை குணமாகும்.
தீர்வு 04:
மஞ்சள் தூளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வாயுத் தொல்லை அகலும்.மஞ்சள் நீர் உடலில் நோய் எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்க உதவுகிறது.
தீர்வு 05:
சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் வாயுத் தொல்லை அகலும்.அதேபோல் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தால் வாயுப் பிரச்சனை சரியாகும்.
தீர்வு 06:
தினமும் உணவு உட்கொண்ட பிறகு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.வயிற்றில் உள்ள வாயுக்களை வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் வெளியேற்றலாம்.
தீர்வு 07:
தினமும் ஒரு கிளாஸ் ஓமத் தேநீர் செய்து குடித்தால் வாயுத் தொல்லை குணமாகும்.வயிற்றில் இருக்கின்ற கெட்ட வாயுக்கள் அகல இந்த ஓம நீர் உதவும்.